மேஷ ராசி

இன்று உங்களுக்கு உயர்வான பலன்கள் கிடைக்கும். நினைத்ததெல்லாம் சிறப்பாக நடக்கும். மங்கல நிகழ்சிகளுக்கு ஏற்பாடுகள் நடக்கும். தொழிலில் உச்சகட்ட யோகம் கிடைக்கும். வியாபாரத்தில் ஒரு நிலையான இடம் உண்டு. யோக பலன்கள் அதிகமாக இருக்கும். மேற்கு திசையில் இருந்து ஒரு அனுகூலமான செய்தி வரும். வேலை இடத்தில் உங்களின் மதிப்பு உயரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு யோக பலன் உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சம்பள உயர்வு அடைவர். கிருத்திகை நட்சத்திரத்தில் செல்வாக்கு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: உங்கள் தேவை அறிந்து உறவினர்கள் உதவி செய்ய காத்திருப்பார்கள். வெளியில் இருந்து தேவைப்பட்ட பணம் கைக்கு வரும்.
ரிஷப ராசி

நினைத்தது நிறைவேறுகின்ற நாள். புதிய முயற்சியில் அதிக லாபத்தை கொடுக்கும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். கிழக்கு திசையில் இருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு கையிருப்பு பெருகும். சேமலாபங்கள் கூடும். குலதெய்வ அருள் கிடைக்கும். பெண்களால் ஆதாயம் உண்டு. வாகன யோகம் உண்டு. வேலை இடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பலனடைவர். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன நிம்மதி பெறுவர். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகன யோகம் சித்திக்கும்.
மிதுன ராசி

இன்று வெற்றிகள் வந்து சேரும் நாள். எண்ணியதெல்லாம் நடக்கும். தொழிலில் மிக மேன்மையான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மக்கள் செல்வம் உருவாகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். மேற்கு திசையில் இருந்து உங்களுக்கு அனுகூலமான தகவல் கிடைக்கும். வேலை இடத்தில் நிம்மதி உண்டாகும். குலதெய்வத்தினுடைய அனுக்கிரகத்தால் தேக ஆரோக்கியம் அதிகரிக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்தது நடக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண வரவு பெறுவார்கள்.
கடக ராசி

வேண்டியதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பாராத வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் கொள்ளை லாபம் கிடைக்கும். உறவினர்களின் உதவவியால் ஒரு பெரிய காரியத்தை முடிப்பீர்கள். சேமலாபங்கள் அதிகரிக்கும். தெற்கு திசையில் இருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும். வெளியூர் நண்பர் உங்களுக்கு சாதகமான தகவலை தருவார். வேலை இடத்தில் எதிர்பார்த்த நன்மை நடக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெருமை அடைவார்கள் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசு உதவி பெறுவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோரின் ஆசி கிடைக்கும்.
சிம்மராசி

நினைத்தது கொஞ்சம் தாமதமாக நடக்கும் நாள். தொழிலில் மிகுந்த அக்கறையோடு செயல்பட வேண்டும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை காணப்படும். தேடிப் போகின்ற நபர் வெளியூர் சென்றிருப்பார். நீங்கள் எதிர்பார்த்த முக்கியமான தகவல் வர தாமதமாகும். தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். வேலை இடத்தில் பணி சுமை கூடும். தனலாபங்கள் ஏற்ற இறக்கமாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன நிம்மதி பெறுவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடுமையாக உழைப்பார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலைப்பளு குறையும்.
கன்னி ராசி

தொட்ட காரியம் எல்லாம் தடங்கல் இல்லாமல் நடக்கும். எந்த விஷயத்திலும் வெற்றி வாய்ப்பு ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வாகன வசதி ஏற்படும். தொழிலில் வியாபாரம் பெருகும். கையில் தாராளமாக பணம் புரளும். பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.வேலை இடத்தில் மரியாதை உயரும். மேற்கு திசையில் இருந்து சிறப்பான செய்தி ஒன்று உங்களுக்கு வரும். யோக பலன் கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் சாதிப்பார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வியாபாரம் பெருகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி நடை போடுவார்கள்.
துலாம் ராசி

ஆசைப்பட்டது எல்லாம் நடக்கும் நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில்துறையில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.. கேட்ட இடத்திலிருந்து பணவரவு இருக்கும். மங்கையர்களால் அனுகூலமும் நன்மையும் உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். புண்ணிய நதிகளில் நீராடும் பாக்கியம் ஏற்படும். வாகன சுகம் உண்டாகும். அரசு பயம் விலகும். பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு காரியம் கை கூடி வரும் சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்லது நடக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் பதவி உயர்வு அடைவார்கள்.
விருச்சிக ராசி

இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நோய் தொல்லைகள் நீங்கி தேக ஆரோக்கியம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வருகையால் கலகலப்பு கூடும். தோப்பு துறை வகையில் வரவுகள் வந்து சேரும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட ரோகங்கள் விலகும். பொருள் இழப்போ நஷ்டமோ ஏற்படாது. எதிர்ப்புகள் முனை மழுங்கி போகும். குலதெய்வ அருள் கிடைக்கும். சிவ பூஜை மூலம் மிருத்யுஞ்ச யோகம் உண்டாகும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு ஆசைகள் நிறைவேறும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் யோக பலன் அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் பொருள் வரவு கூடும்.
தனுசு ராசி

வெற்றிகள் தேடி வரும் நாள். பொருள் வரவு அதிகரித்து மகிழ்ச்சி கூடும். பயிர் தொழிலில் லாபம் கிட்டும். விவசாய வேலைகளில் வருமானம் கூடும்.அரசுத் துறையில் இருந்து உதவி கிடைக்கும். அனுகூலங்களும் வந்து சேரும். குடும்பத்தில் சௌகரியம் அதிகரிக்கும். உறவினர்கள் வரவால் வீடு கலகலப்பாக இருக்கும். வடக்கு திசையில் இருந்து உங்களுக்கு நல்ல செய்தி வரும். குடும்ப சுகமும் ஆடை ஆபரணங்களும் சேரும். தொழில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். பூராட நட்சத்திரக்காரர்கள் விரும்பியது கிடைக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் பணத் தேவை நிறைவேறும்.
மகர ராசி

உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் நாள். தானிய லாபம் உண்டாகும். குடும்ப சௌரியங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். ஐடி ஊழியர்கள் சிறப்பான பலன் பெறுவார்கள். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அறிவுத்திறமையால் முன்னேற்றம் ஏற்படும். வேலை இடத்தில் பதவி உயர்வு உண்டாகும். புனித நதிகளில் நீராடும் வாய்ப்பு ஏற்படும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் பதவி உயர்வு உண்டாகும். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நடக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு இருக்கும். இன்று உங்கள் பலம்: வீரியமாக நின்று காரியத்தை முடிக்கின்ற ஆற்றல் பெறுவீர்கள். நல்ல நண்பர் பண உதவி செய்ய தயாராக இருப்பார்.
கும்ப ராசி

மிதமான பலன்கள் நடக்கும் நாள். வேலை சம்பந்தப்பட்ட அலைச்சல் அதிகமாகும். சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாது. பகைவர்கள் தரும் தொல்லைகளை எதிர்க்க வேண்டும். பிள்ளைகளாலும் நெருக்கடி உண்டாகும். ஆடம்பரமான செலவுகளை குறைக்க வேண்டும். தொழிலில் மிதமான லாபமே கிடைக்கும். அதிகாரிகள் தொல்லையும் ஏற்படலாம். வம்பு வழக்குகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு லாபம் சற்று குறையும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இரவு தூக்கம் கெடும்.
மீன ராசி

மங்கலகரமான செய்திகள் வந்து சேரும் நாள். நல்ல காரியங்கள் தாமாகவே நடக்கும். வேலை இடத்தில் தொல்லைகள் விலகும். அதிகாரிகளின் பயம் நீங்கும். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். நன்மைகள் பெருகி மன நிம்மதி தரும். வியாபாரத்தில் வருமானம் கூடும். வடக்கு திசையில் இருந்து அனுகூலமான செய்தி வரும். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய வாய்ப்பு ஏற்படும். வியாபார லாபங்கள் அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு எண்ணியது நிறைவேறும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பெரியோர்களின் ஆசி பெறுவார்கள். ரேவதி நட்சத்திரக்காரர்கள் மரியாதை அதிகரிக்கும்.
