மேஷ ராசி

நினைத்த காரியங்கள் நடக்கும் நாள். எந்த காரியத்திலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சிறப்பாக இருக்கும். மற்றவர்களால் மறைமுக தொல்லைகளும் விமர்சனங்களும் ஏற்படலாம். குடும்பத்தில் சிறிது குழப்பம் ஏற்படக்கூடும். என்றாலும் அதனால் சிக்கல் எதுவும் இருக்காது. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செலவுகள் குறையும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருமானம் அதிகரிக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குறைகள் தீரும்.
ரிஷப ராசி

சற்று தாமதமாக பலன்கள் வந்து சேரும் நாள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராக இருக்கும். மனைவி குழந்தைகள் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒரு முறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. அலுவலகத்தில் பணிகளில் கூடுதலான கவனம் தேவை. குடும்பத்தில் சிக்கல் ஏற்படக்கூடும். என்றாலும் அதனால் கவலைப்பட தேவையில்லை. மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் தொழிலுக்கு ஏற்படக்கூடும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வம் அதிகரிக்கும். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்குக் கூடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி உண்டாகும்.
மிதுன ராசி

வெற்றிகரமான நன்மைகள் வந்து சேரும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகள் சம்பந்தமான முடிவு எடுப்பதில் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். கையில் தாராளமாக பணம் புழங்கும். குடும்பம் குதூகலமாக நடக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்புகள் வந்து சேரும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெருமைகள் கிடைக்கும் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெருகும்.
கடக ராசி

வேண்டியதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பாராத வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் கொள்ளை லாபம் கிடைக்கும். உறவினர்களின் உதவவியால் ஒரு பெரிய காரியத்தை முடிப்பீர்கள். சேமலாபகங்கள் அதிகரிக்கும். தெற்கு திசையில் இருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும் வெளியூர் நண்பர் உங்களுக்கு சாதகமான தகவலை தருவார். வேலை இடத்தில் எதிர்பார்த்த நன்மை நடக்கும் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்தவர்கள் பெருமை அடைவார்கள் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசு உதவி பெறுவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோரின் ஆசி கிடைக்கும்
சிம்மராசி

வராது என்று நினைத்த பணம் கிடைத்து துணிவை கொடுக்கும். வியாபாரத்தில் உங்கள் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை கொண்டு வரும் தொழிலில் போட்டிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும் உங்களுக்கு தெய்வ அனுக்கிரகம் எப்போதும் உண்டு. முன்னோர்கள் நல்லாசியோடு உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பாராத இடத்திலிருந்து கூட உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்லவரை சந்திப்பார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்புகள் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மைகள் அதிகரிக்கும்.
கன்னி ராசி

ஏற்ற இறக்கமான பலன் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் அதிகமான உழைப்பை போட வேண்டும். தொழிலுக்கு ஏற்படும் மறைமுக எதிர்ப்புகளை களைய வேண்டும். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் கவனக்குறைவு வேண்டாம். எதையும் சீர்தூக்கிப் பார்த்து செய்ய வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அவசரப்பட்டு கடன் வாங்க வேண்டாம். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். குலதெய்வ அருளால் நல்லது நடக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு பெறுவார்கள்.
துலாம் ராசி

விருப்பப்பட்ட காரியங்கள் நடக்கும் நாள். மனதளவில் திருப்தியான சூழல்கள் உருவாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணி புரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு வியாபாரத்திற்கு உதவி செய்யும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்கும் நிலை உண்டாகும். வாகன யோகம் சித்திக்கும். தன தானிய லாபம் அதிகரிக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மைகள் உண்டாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்புகள் வந்து சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும் .
விருச்சிக ராசி

வெற்றிகள் தேடி வரும் நாள். செல்வ பெருக்கு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். தொழிலில் புதிய பாதைகள் தெரியும். வியாபாரத்திற்கு நண்பர்களின் உதவி பக்கபலமாக அமையும். வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு கிட்டும். வெளிநாட்டிலிருந்து நண்பரின் உதவி தேடி வரும். பண வரவு தாராளமாக இருக்கும். வங்கி இருப்பு உயரும். தேவையில்லாத செலவுகள் குறையும். வேலை இடத்தில் சிறப்புகள் சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைகள் சிறப்பாக நடக்கும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் வேலை மதிப்பு உயரும்.
தனுசு ராசி

மனநிம்மதி அதிகரிக்கும் நாள். வெளிநாட்டு பயணத்திற்கான ஏற்பாடுகள் தொடரும். புதிய வேலையில் முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அரசு வேலையில் பதவி உயர்வு உண்டாகும். யோக பலன்கள் தானாக வந்து சேரும். வியாபார வெற்றியின் மூலம் தன லாபம் பெருகும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். புனித யாத்திரை செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். பூராட நட்சத்திரக்காரர்கள் தொழில் மேன்மை அடையும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் எண்ணியது நிறைவேறும்.
மகர ராசி

விரும்பிய சம்பவங்கள் நடக்கும் நாள் இன்று. வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். உதவி செய்கின்ற மனநிலை உங்களுக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைத்து பொருள் சேர்க்கை உண்டாகும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வெளியூரிலிருந்து தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வெற்றியடைவார்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் நினைத்ததை முடிப்பார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வாகனம் வாங்குவார்கள்.
கும்ப ராசி

இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடிவரும். குடும்பத்தில் மங்கல முயற்சிகள் வெற்றி பெறும். தர்ம காரியங்கள் நடக்கும். மகான்களின் ஆதரவு கிட்டும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். அலைந்து திரிய வேண்டிய வேலையில் நல்ல லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக பல காரியங்களை சாதிப்பீர்கள். தனதானிய லாபம் கிட்டும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்புகள் சேரும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும்.
மீன ராசி

தேடிய நன்மைகள் வீடு வருகின்ற நாள் இது. வியாபாரத்தில் மிகப்பெரிய லாபமடைவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கிழக்கு திசை பயணத்தால் ஒரு பெரிய நன்மை உண்டாகும். வியாபாரத்தில் நினைத்துப் பார்க்காத லாபம் கிட்டும். தொழில்துறையில் எதிர்ப்புகள் விலகும். உங்களைக் கெடுக்க நினைத்தவர்கள் கெட்டுப் போவது நிச்சயம். பெண்களால் ஆதாயம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றிகள் சித்திக்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பண வரவு பெறுவார்கள். ரேவதி நட்சத்திரக்காரர்கள் மேன்மை அடைவார்.
