30.4 C
Chennai
June 28, 2026
இலங்கை

ஆளுநரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது காதர் மஸ்தான்

துணிச்சலான முடிவை எடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியா மாநகர சபை முதல்வரின் பதவி நீக்கமானது எந்தவொரு தன்னிச்சையான முடிவும் அல்ல. அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, அவை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே ஆளுநர் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.

 மேலும் தெரிவிக்கையில்,கடும் கண்டனம் வவுனியா மாநகர சபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஊழல் அற்ற நிர்வாகமே மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற ஆளுநர் மேற்கொண்டுள்ள இந்தச் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.தற்போதைய அரசாங்கம் ஊழல்வாதிகளை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான சூழலில் உண்மையை மறைத்துவிட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் பொய்யான கருத்துக்களை முன்வைப்பது மிகுந்த கவலைக்குரியது.

ஊழலுக்கு எதிரான ஆளுநரின் இந்தச் சீர்திருத்த நடவடிக்கை வவுனியா மாநகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அந்த ஒரு வார்த்தை போதும் முதல்வரே உங்களை வீட்டுக்கு அனுப்ப கொந்தளித்த வானதி சீனிவாசன்

finhelvantaan

இரகசிய தகவலால் அம்பலம் யாழில் நீண்டநாள் குடும்பத்தோடு அரங்கேற்றிய மோசமான செயல்

finhelvantaan

இன்றைய வானிலை 08/02/2026

finhelvantaan

Leave a Comment