30.4 C
Chennai
June 28, 2026
இலங்கைசர்வதேசம்

ஹெலிகொப்டர் விபத்து 14 பேர் பலி சவூதி அரேபியாவில் 

எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு இன்று 28 விபத்துக்குள்ளாகியுள்ளது.

சவூதி அரேபியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவூதி அராம்கோ Saudi Aramco எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு இன்று 28 விபத்துக்குள்ளாகியுள்ளது.

ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அந்த செய்தி நிறுவனம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

Related posts

ரஷ்யப த்திரிகைகள் கடும் விமர்சனங்கள்

தெற்கு கடலில் மீட்கப்பட்ட பொதிகளில் 839 கி.கி போதைப்பொருள்

finhelvantaan

13 July 2025 Sunday. Pothikai.fm தேதி Date 29 – ஆனி – விசுவாவசு ஞாயிறு இன்று Today சுபமுகூர்த்த நாள்

Leave a Comment