மேஷ ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாள். எடுத்த காரியங்கள் எல்லாம் சிறப்பாக முடியும். பண வரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும். தொழில் சிறப்பாக நடக்கும். தேடிப்போன காரியம் கைகூடி வரும். தெய்வ அனுக்கிரகத்தால் வீட்டிலிருந்த பிரச்சனைகள் தீரும். உங்களின் பேரும் புகழும் உயரும். பிள்ளைகளைப் பற்றிய கவலை நீங்கி சந்தோஷம் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் மூலமாக பலன் உண்டாகும். மன நிம்மதி அதிகரிக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலையில் திருப்தி உண்டாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண வரவு அடைவார்கள்.
ரிஷப ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு மிகவும் யோகமான நாள். சிரமமாக இருக்கும் என்ற காரியம் சுலபமாக முடிந்துவிடும். வேலையில் இருந்த பிரச்சனை விலகி மன நிம்மதி ஏற்படும். வீட்டிலும் சந்தோஷமும் திருப்தியும் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும். இறைவன் அனுக்கிரகத்தால் தேக ஆரோக்கியம் கூடும். பெரியோர்களின் ஆசி உண்டு. வியாபாரமும் தொழிலும் அதிக வருமானத்தை கொடுக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் அடைவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருப்தியுடன் இருப்பார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உதவிகள் தேடி வரும்
மிதுன ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தரும் நாள். வியாபாரம் சற்று மிதமாக இருக்கும். தொழில்துறைகளில் நீங்கள் நினைத்ததற்கு மாறாக சில சம்பவங்கள் நடக்கும். அதையும் தாண்டி உங்களுக்கு நல்ல பலன் உண்டாகும். வெளியூரில் இருந்து நீங்கள் கேட்ட உதவிகள் தாமதம் இல்லாமல் வந்து சேரும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் உண்டாகி மறையும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலையில் திருப்தி அடைவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண வரவு பெறுவார்கள் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மதிப்பு உயரும்.
கடக ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக அமையும். எந்த காரியத்திலும் இடையூறு இல்லாமல் நடக்கும். குலதெய்வத்தினுடைய அனுகிரகம் கிடைக்கும். கண் திருஷ்டி போன்ற துர் சம்பவங்கள் பாதிப்பு நீங்கும். வியாபாரத்தில் மிகுந்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பு சிறப்பாக இருக்கும். வெளிவட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறுதியுடன் இருப்பீர்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் மேன்மை அடைவீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்குப் பெறுவீர்கள். இன்று உங்கள் பலம்: உங்களுக்கு சேர வேண்டிய பணம் தாமதம் இல்லாமல் வரும். அரசு அதிகாரி ஒருவர் அனுசரணையாக இருப்பார்.
சிம்மராசி அன்பர்களே!

உங்கள் சிக்கல் எல்லாம் விலகும் நாள். தொழிலில் அபாரமாக வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் செழிப்பாக நடக்கும். உதவிகள் தானாக தேடி வரும். நண்பர்கள் உங்கள் மனதை புரிந்து கொண்டு நடப்பார்கள். சூரிய பகவான் அனுக்கிரகத்தால் தேக ஆரோக்கியம் சுறுசுறுப்பாக இருக்கும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வேலை இடத்தில் உங்களின் தேவை அதிகரிக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் அடைவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.
கன்னி ராசி அன்பர்களே!

உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கும் நாள். பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வேலை பார்ப்பீர்கள். நினைத்த காரியம் நடக்கும். கேட்ட இடத்தில் பண உதவி வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெருகும். கையில் பணம் புரண்டு வங்கி இருப்பு அதிகரிக்கும். குலதெய்வத்தின் அருளால் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை நடக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல பலன் பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வேலை உயர்வு கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் சிக்கல் தீரும்.
துலாம் ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலையில் சின்ன சின்ன இடையூறுகள் வந்து விலகும். கொடுத்த பணம் திரும்பி வர கொஞ்சம் தாமதமாகும். வேலைப்பளு அதிகரிக்கும். வேலை இடத்தில் மேலதிகாரிகளின் அழுத்தம் கூடும். மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். குலதெய்வ அனுக்கிரகத்தால் வீட்டிலிருந்த குழப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு நல்லது நடக்கும் சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு விருப்பம் ஏற்படும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு கிடைக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களே!

உங்கள் தேவைகள் பூர்த்தியாகி மகிழ்ச்சி தரும் நாள். வேலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இறைவன் அருளால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் துறைகள் மேன்மை அடையும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். பெண்களால் ஆதாயம் உண்டு விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் நல்ல காரியம் நடக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் பதவி உயர்வு பெறுவார்கள்.
தனுசு ராசி அன்பர்களே!

உங்களுக்கு சிறப்பான நாள் இது. தொழில் சில போட்டிகள் இருந்தாலும் அது தானாகவே விலகிப் போகும். வியாபாரத்தில் கொஞ்சம் லாபம் அதிகரிக்கும். உறவினர் இடையே இருந்த சச்சரவு நீங்கும். உங்களின் மறைமுக எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவில் சிறு தடங்கல் இருந்தாலும் அது உங்களை பாதிக்காது. கடன் சுமை குறையும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு வேண்டியது கிடைக்கும். பூராட நட்சத்திரக்காரர்கள் லாபம் அடைவார்கள். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் பதவி உயர்வு பெறுவார்கள்.
மகர ராசி அன்பர்களே!

இன்று யோக பலனை தரக்கூடிய நாள். எந்த காரியத்தை எடுத்தாலும் அது உங்களுக்கு சாதகமாக நடக்கும். வியாபாரத்தில் சிறப்பான வெற்றி உண்டாகும். தொழில்துறைகள் பெருகும். பண வரவு இருக்கும். செல்வாக்கு கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். வீட்டில் இருந்த பிரச்சனைகள் தீரும். சந்தோஷம் பெருகும். வேலை இடத்தில் நிம்மதி கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வெற்றி பெறுவார்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் மன நிம்மதி அடைவார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் கையிருப்பை அதிகரிப்பார்கள்.
கும்ப ராசி அன்பர்களே!

சனி பகவான் அருளால் உங்கள் பிரச்சனைகள் விலகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த காரியம் நடக்கும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வேலை இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வேலை பளு அதிகரித்தாலும் அதை சுமூகமாக முடிப்பீர்கள். உறவுகளுக்கு மத்தியிலே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இறைவன் அருளால் குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மை கிடைக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உதவிகள் வந்து சேரும்.
மீன ராசி அன்பர்களே!

சந்தோஷப்படுத்தும் நாளாக இன்று அமையும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி தாமதமாக வரும். பண வரவு சற்று குறைந்தாலும் பாதிப்பு இருக்காது. வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பம் வந்து மறையும். குலதெய்வத்தின் அருளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முறையாக வாங்கிய கடனை அடைப்பீர்கள். மனதில் அமைதி குடிகொள்ளும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்லது நடக்கும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வேண்டியது கிடைக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நிறைவேறும்
