August 1, 2026
இலங்கைசர்வதேசம்

இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெரும் தொகை போதைப்பொருள் வெளிநாட்டில் இருந்து

6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கஞ்சா வகை போதைப்பொருள் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து சரக்கு வானூர்தி மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட, சுமார் 10 கோடியே 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கஞ்சா வகை போதைப்பொருள் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 24 ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து UL405 வானூர்தியின் மூலம் பரிசுப் பொதியாக இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சரக்கு கடந்த ஜூலை 31 ஆம் திகதி TRICO UPB களஞ்சியசாலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. உலோகக் கொள்கலன்களுக்குள் பொலித்தீன் பொதிகளுக்குள் மறைத்து இந்த போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

வாகன இறக்குமதி மூலம் வருமானத்தை அதிகரிக்க திட்டமிடும் அநுர அரசாங்கம்

finhelvantaan

இன்றைய வானிலை Pothikai.fm

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஆமதாபாத்தில் தரை இறக்கம்

finhelvantaan

Leave a Comment