August 1, 2026
இலங்கை

தலைமை நீதிபதி முன்வைத்த கருத்துக்களை நான் ஏற்கவில்லை.ஹேமசிறி பெர்னாண்டோ

மரண தண்டனை விதிப்பதற்கு முன் பிரதிவாதிக்கு ஏதேனும் கூற உள்ளதா என நீதிமன்றம் வினவியது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றிருந்தார்

அதற்குப் பதிலளித்த ஹேமசிறி பெர்னாண்டோ தலைமை நீதிபதி முன்வைத்த கருத்துக்களை நான் ஏற்கவில்லை. கனம்பொருந்திய நீதிபதி அவர்களே… பாதுகாப்புச் செயலாளர் என்று ஒரு பதவி இல்லை. நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவே பணியாற்றினேன். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்பது மற்ற அமைச்சுகளின் செயலாளர்களைப் போன்றதே. சிறப்பு அதிகாரங்கள் எதுவும் இல்லை. அமைச்சரின் அறிவறுத்தலின் படியே நான் செயல்பட்டேன். அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றிருந்தார்

பதில் அமைச்சராக எவரையும் அவர் நியமிக்கவில்லை. அமைச்சர் இல்லாத போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் செயல்பாடுகள் முடங்கிவிடும். நிலந்த ஜயவர்தன ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயல்பட்டார். நான் நியமிக்கப்பட்டதும் புலனாய்வு தகவல்கள் குறித்து எவ்வாறு செயல்படுவது என்று ஜனாதிபதியிடம் கேட்டேன். அதற்கு ஜனாதிபதி, ‘புலனாய்வு தகவல்களை நிலந்த எனக்குத் தெரிவிப்பார், நீங்கள் நிர்வாக வேலைகளைக் கவனியுங்கள்’ என்றார். நான் அமைச்சின் நிர்வாகக் கடமைகளை மட்டுமே செய்தேன். நான்கு ஆண்டுகளில் புலனாய்வு தகவல்களை ஜனாதிபதியிடம் நிலந்தவே வழங்கி வந்தார்.

தாக்குதலுக்கு முந்தைய நாள் நிலந்தவிடமிருந்து எந்த ஆவணமும் எனக்கு வரவில்லை. இரண்டு வாட்ஸ்அப் செய்திகள் மட்டுமே வந்தன. ஏப்ரல் 9 ஆம் திகதி நடந்த புலனாய்வு ஆய்வுக் கூட்டத்தில் நிலந்த இந்தத் தாக்குதல் பற்றி எதையும் கூறவில்லை. கூறியிருந்தால் அங்கிருந்த இராணுவ, கடற்படை புலனாய்வு பிரதானிகளுக்கும் தெரிந்திருக்கும்.எங்கள் குழுக்களில் ஒன்று கிழக்குப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தும் என்றும் அவர் எங்களுக்குத் தெரிவித்தார்.

இந்தத் தகவல் கிடைத்த ஏப்ரல் 1 முதல் 16 வரையிலான காலகட்டத்தில் ஜனாதிபதி இலங்கையில் இருந்தார். ஆனால், நிலந்த ஜயவர்தன இந்தத் தகவலை ஜனாதிபதிக்குத் தெரிவித்திருக்கலாம். அவர் அதை வேண்டுமென்றே மறைத்தார். இந்தத் தகவலை அவர் ஏழு முறை மறைக்க முயன்றார். அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரே இப்படிச் செயல்பட்டால், அதற்கு நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலையில், நிலந்த ஜயவர்தன என்னை அழைத்து, நடத்தப்படவிருந்த தாக்குதல்கள் குறித்து எனக்குத் தெரிவித்தார்.

இதை நம்ப முடியுமா என கேட்டேன். இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிப்போம் என்று அவர் கூறினார். நிலந்த ஜயவர்தனவின் கீழ் நாடு முழுவதும் சுமார் 1500 புலனாய்வு அதிகாரிகள் உள்ளனர். இதை விசாரித்து உறுதிப்படுத்தும்படி அவர்களிடம் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. கனம்பொருந்திய நீதிபதி அவர்களே… இராணுவத்தை வரவழைக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் கூட எனக்கு இல்லை. தலைமை நீதிபதி அவர்களே, நீங்கள் என் நிலையில் இருந்திருந்தால், நீங்களும் அதையே செய்திருப்பீர்கள்.

“தாக்குதலுக்குப் பிறகு ஜனாதிபதி விஜித் மலல்கொட குழுவை நியமித்தார். அந்த குழு 14 அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியது. ஆனால் மற்றவர்களை விட்டுவிட்டு எனக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் மட்டுமே நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி கூறினார்.

Related posts

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக உயர்வு 213 பேரை காணவில்லை 2,054,535 பேர் பாதிப்பு

finhelvantaan

பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருடன் நளிந்த ஜயதிஸ்ஸ

finhelvantaan

அரசியல் சாசனத்திற்கு முரணானது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை

finhelvantaan

Leave a Comment