விஜய் டெல்லி சென்றபோது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந்நிலையில் ஒரு நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் இன்று தமிழகம் வருகிறார். தவெக கூட்டணி ஆட்சியமைத்து 3 மாதங்களாகிவிட்டன. ஆட்சியமைத்த பிறகு ராகுல் காந்தி இரண்டாவது முறையாக தமிழகம் வருகிறார். மாமல்லபுரத்தில் நடைபெறும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் ராகுல் கலந்து கொண்டு, நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். அவர் மேலும் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்றுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெக கூட்டணியில் இணைந்தனர். தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகிய இருவர் அமைச்சராகியுள்ளனர். விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வதற்காக ராகுல் சென்னை வந்திருந்தார்.

ராகுல் காந்தி தமிழகம் பயணம் அதன் பிறகு விஜய் டெல்லி சென்றபோது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந்நிலையில் ஒரு நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் ராகுல் கலந்து கொள்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை 10 மணிக்கு சென்னை வருகிறார். பிறகு சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார். இயக்கம் மறுசீரமைப்பு திட்டம் என்கிற பெயரில் ஜூலை 23 ஆம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு, மாணிக்கம் தாகூர் தலைமையில் பயிற்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியை சீரமைத்து வளர்ப்பதற்காக இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதன் நிறைவு விழா இன்று நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி, மாலை 4 மணியளவில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

நீட் தேர்வால் பாதித்த குடும்பம் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினரையும் ராகுல் காந்தி சந்தித்து பேசவுள்ளார். மேலும் நீட் தேர்வால் பாதித்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரையும் ராகுல் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பில் அவர் முதலமைச்சர் விஜயை சந்திக்க திட்டமில்லை என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இந்த திட்டங்களை முடித்துவிட்டு இரவு அவர் டெல்லி திரும்பவுள்ளார்.
