மேஷ ராசி

நினைத்த காரியங்கள் நடக்கும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை தரும். தொழில்துறையில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பெற்றோர்களுக்கு மருத்துவ செலவு செய்ய வேண்டி வரும். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் கிடைக்கும். கிழக்கு திசையில் இருந்து ஒரு நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வேலை உத்திரவாதம் வந்து சேரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள்.
ரிஷப ராசி

நன்மையான செய்திகள் வந்து சேரும் நாள். வேலை இடத்தில் உங்களின் திறமை பாராட்டப்படும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். தொழிலில் புதிய பாதை அமையும். வருமானம் பெருகி மன தைரியம் உண்டாகும். வியாபாரம் மேன்மையாக நடக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை பெறுவார்கள். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழிலை வளர்க்க திட்டம் வகுத்து செயல்படுவீர்கள். அரசு அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள்.
மிதுன ராசி

உயர்ந்த பலன்கள் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள் பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் தீரும். தொழிலில் புதிய மாற்றம் உருவாகும். பண வரவு தேவைக்கேற்ப வந்து சேரும். வேலை இடத்தில் திறமை பாராட்டப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோகபலன் அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனலாபம் பெறுவார்கள்.
கடக ராசி

சிறப்பான யோகம் வரும் நாள். வியாபாரத்தில் அதிகமான லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்த எதிர்ப்புகள் மாறும். வேலை இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். கையிருப்பு கூடும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அரசு வேலையில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடு நடக்கும். யோக பலன்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பான பலன் பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய சித்தி அடைவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் பெறுவார்கள்.
சிம்மராசி

நன்மையான காரியங்கள் நடக்கும் நாள் இன்று. உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் சிறப்பு சேரும். பதவி உயர்வு உண்டாகும். சம்பள அதிகரிப்பு ஏற்படும். வியாபாரத்தில் மிகுதியான லாபம் வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். குறை கூறுபவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம். குலதெய்வத்தினுடைய அருள் கிட்டும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகன யோகம் உண்டாகும்
கன்னி ராசி

மங்கலகரமான செய்திகள் கிடைக்கும் நாள். உங்கள் சொல்லுக்கு மரியாதை ஏற்படும். தொழிலில் நேர்மையும் திறமையும் வருமானத்தை பெருக்கும். வேலை இடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வருமான உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் பெருகி கையில் பணம் புரளும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு பெறுவார்கள்.
துலாம் ராசி

எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும் நாள். மன உறுதி தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். பங்குப் பரிவர்த்தனையில் சிறப்பான உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரித்து கையிருப்பு கூடும். அலுவலகத்தில் பதவி உயர்வு ஏற்படும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை இருக்கும். இறைவன் அருளால் நல்லது நடக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு யோகபலன் வந்து சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் பூமி லாபம் கிடைக்கும் .
விருச்சிக ராசி

வியாபாரம் சிறப்பாக நடக்கும். வருமானம் பெருகும். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை இடத்தில் உங்களின் திறமை வெளிப்படும். அரசு அலுவலகங்களில் வேலை நடக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். வீட்டில் நல்ல காரியம் நடக்கும். கடன் சுமை குறையும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் பூமி லாபம் கிட்டும்.
தனுசு ராசி

சிறப்பான வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். மேன்மையான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார உயர்வு ஏற்படும். கையிருப்பு கூடும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மை உண்டாகும். பூராடம் நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நிறைவேறும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு உயரும்.
மகர ராசி

சிறப்பான காரியங்கள் நடக்கும் நாள். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். அரசாங்க ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். தொழில் பொறாமைப்படும் அளவிற்கு முன்னேற்றம் அடையும். கோயில் திருப்பணி செய்யும் வாய்ப்பு உண்டாகும். கண் திருஷ்டி பாதிப்பு நீங்கும். குலதெய்வத்தினுடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்குப் பெருகும். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு பொருள் சேர்க்கை உண்டாகும்.
கும்ப ராசி

நினைத்த காரியங்கள் நடக்கும் நாள். பூமி லாபம் கிட்டும். வியாபாரம் எதிர்பாராத லாபத்தை கொடுக்கும். தொழிலில் மிகச்சிறந்த முன்னேற்றம் ஏற்படும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு அதிகரிக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். ஆரோக்கியம் மேம்படும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல காரியம் நடக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு பூமி லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலை உயர்வு உண்டாகும். இன்று உங்கள் பலம்: புதிய நுட்பத்தோடு வியாபாரத்தை பெருக்க திட்டம் போடுவீர்கள். கால நேரம் பார்க்காமல் பாடுபடுவீர்கள்.
மீன ராசி

நல்ல பலன்கள் நடக்கும் நாள். நீங்கள் திட்டம் போட்ட செயல் தடையில்லாமல் நடக்கும். வியாபாரத்தில் செய்த நுட்பங்கள் பலன் கொடுக்கும். பண வரவு அதிகரிக்கும். உங்கள் பேச்சும் செயலும் செல்வாக்கை கொண்டு வரும். அரசியல் வட்டாரத்தில் பழக்கம் ஏற்படும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யப்படும். எதிர்ப்புகள் மறைந்து போகும். பதவி உயர்வு கிடைக்கலாம். விருப்பப்பட்ட வேலை மாறுதல் உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான காரியம் நடக்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வருமானம் அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் கேட்ட உதவிகள் கிடைக்கும்.
