மேஷ ராசி

நினைத்த காரியங்கள் தாமதமாக நடக்கும் நாள். வியாபாரம் சற்று மந்தமாகவே நடக்கலாம். தொழிலுக்கு சில எதிர்ப்புகள் தோன்றலாம். திடீர் செலவுகள் வந்து சிரமப்படுத்தும். உங்களின் பொறுப்பு அலுவலகத்தில் அதிகரிக்கும். தேவையில்லாத சில சம்பவங்கள் வேலை இடத்தில் நடக்கலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புரிந்து கொள்ளாத உறவுகளால் மனச்சங்கடம் ஏற்படலாம். வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய தாமதம் அடைவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை சுமை கூடும்
ரிஷப ராசி

அதிரடியான செய்திகள் வந்து சேரும் நாள். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் இடையூறுகள் விலகும். தொழில்துறைகளில் விறுவிறுப்பு அதிகரிக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். கையில் தாராளமாக பணம் புழங்கும். நினைத்த காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். உங்களின் செல்வாக்கு வேலை இடத்தில் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டு உற்சாகத்தை கொடுக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு பெறுவார்கள். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் பெறுவார்கள்
மிதுன ராசி

எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் நாள். செய்யும் வேலையில் திருப்தி உண்டாகும். விருப்பப்பட்ட இடமாறுதல் ஏற்படலாம். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மேல் அதிகாரி ஆதரவால் சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் துறையில் இருந்த இடையூறுகள் நீங்கி வியாபாரம் பெருகும். தகவல் தொழில்நுட்பத் துறையில் மேன்மை உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் அதிகரிக்கும். முக்கிய கடன்கள் அடைபடும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லாபம் பெறுவார்கள்.
கடக ராசி

மக்கள் செல்வம் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் அதிகமான லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்த எதிர்ப்புகள் மாறும். வேலை இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். கையிருப்பு கூடும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அரசு வேலையில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடு நடக்கும். யோக பலன்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மையான பலன் பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் அடைவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி பெறுவார்கள்.
சிம்மராசி

ஏற்ற தாழ்வான பலன்கள் நடக்கும் நாள் இன்று. நீங்கள் எதிர்பார்த்த செய்தி தாமதமாக வரக்கூடும் உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் தோன்றலாம் வீட்டில் மருத்துவ செலவு வரலாம் வியாபாரத்தில் மந்தமான பலன்கள் கிடைக்கும் தொழில்துறையில் சில இடையூறுகள் ஏற்படலாம் நெருங்கிய நண்பரே எதிர்ப்பாக நடக்கும் நிலை உருவாகலாம் பணிச்சுமையால் வேலையில் கவனம் சிதறலாம் மேலதிகாரிகளின் அழுத்தம் அதிகரிக்கலாம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன அழுத்தம் அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செலவுகள் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனப் பழுது உண்டாகும்.
கன்னி ராசி

சுப செய்திகள் வந்து சேரும் நாள். உங்கள் சொல்லுக்கு மரியாதை ஏற்படும். தொழிலில் நேர்மையும் திறமையும் வருமானத்தை பெருக்கும். வேலை இடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வருமான உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் பெருகி கையில் பணம் புரளும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு பெறுவார்கள்.
துலாம் ராசி

உயர்வு தாழ்வான பலன்கள் நடக்கும் நாள். சில சிரமமான நிலைகளை தொழிலில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் சுணக்கமான நிலை காணப்படும். மற்றவரின் தவறை சுமக்க வேண்டிய கட்டாயம் வேலை இடத்தில் ஏற்படும். அலுவலகத்தில் வருமான பாதிப்பு ஏற்படலாம். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த நன்மை தடைபடலாம். குலதெய்வத்தின் அருளால் நன்மைகள் நடக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மிதமான பலன் உண்டாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் திடீர் செலவுகள் உண்டா .
விருச்சிக ராசி

நினைத்த காரியம் நிறைவேறும் நாள். வியாபாரம் சிறப்பாக நடக்கும். வருமானம் பெருகும். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை இடத்தில் உங்களின் திறமை வெளிப்படும். அரசு அலுவலகங்களில் வேலை நடக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். வீட்டில் நல்ல காரியம் நடக்கும். கடன் சுமை குறையும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் பூமி லாபம் கிட்டும்.
தனுசு ராசி

சிறப்பான வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். தொழில்நுட்பத்தோடு தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நடக்குமா? என்று இருந்த ஒரு காரியம் நடந்து உங்களை உற்சாகப்படுத்தும். மளமளவென வியாபார வாய்ப்புகள் பெருகும். உறவினர்களின் ஆதரவு ஊக்கத்தை கொடுக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு தன லாபம் உண்டாகும். பூராட நட்சத்திரக்காரர்கள் நல்லது நடக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் மதிப்பு உயரும்
மகர ராசி

எதிர்ப்புகளை தாண்டி வரும் நாள். தொழிலில் மறைமுக எதிர்ப்பு இருந்தாலும் அது விலகும் .அலுவலகத்தில் பொறாமை உணர்ச்சி கூடும். ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடக்கும். வேலை மாறுதலுக்கு வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் சில சறுக்கல்கள் உண்டாகலாம். ஆனால் அதுவும் உடனே சரி ஆகும். சுபச் செலவுகள் வரும். எதிர்ப்புகளை அடையாளம் கண்டு விலகும் நிலை உருவாகும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படலாம். இறைவன் அருளால் நல்லது நடக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு வருமானம் பெருகும். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு பதவி மாற்றம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.
கும்ப ராசி

நல்ல காரியங்கள் நடக்கும் நாள். விறுவிறுப்பாக வியாபாரம் நடக்கும். பண வரவு அதிகரிக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வெளியூர் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் திருப்தி ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உற்சாகப்படுத்தும். வீட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்படும். குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிக்கும் வாய்ப்பு உண்டாகும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்கு உண்டாகும். இன்று உங்கள் பலம்: சலிப்பு இல்லாமல் உழைக்கும் மன உறுதியோடு செயல்படுவது. லாபத்தை அதிகரிக்கும் திட்டங்கள் தீட்டுவது.
மீன ராசி

எதிர்பார்த்த பலன்கள் நடக்கும் நாள். தொழில்நுட்பத்தோடு நீங்கள் செய்யும் வியாபாரத்திற்கு வெற்றி கிடைக்கும். பங்கு பரிவர்த்தனையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக லாபம் வரும். தகவல் தொழில்நுட்பத்தில் மேன்மை ஏற்படும். அலுவலகத்தில் உங்களின் திறமை பாராட்டுக்குள்ளாகும். வேலை இடத்தில் நுட்பமான வேலை திறன் வெளிப்படும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தன லாபம் அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் வருமான உயர்வு உண்டாகும்.
