July 1, 2026
இலங்கைதமிழ்நாடு

செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை வலைவீசி தேடும் போலீசார் தவெக ஆட்சியை கவிழ்க்க சதி

அசோக்குமாரின் வீடு மற்றும் சென்னையில் அவர் தங்கியிருந்ததாக கூறப்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த புகாரின் பேரில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்னதாக கரூரில் உள்ள அசோக்குமாரின் வீடு மற்றும் சென்னையில் அவர் தங்கியிருந்ததாக கூறப்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூடியூபர் திருநாவுக்கரசு உள்பட மொத்தம் 4 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் அசோக்குமார் சென்னையில் சந்தித்து பேசியதாகவும், அப்போது அவர் தான் குதிரை பேரத்தில் ஈடுபடுமாறு சொல்லியதாகவும் கூறப்படுகிறது.

தவெக எம்.எல்.ஏ பரபரப்பு புகார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி தொகுதி எம்.எல்.ஏவும், தவெகவை சேர்ந்தவருமான இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் என்னிடம் யூடியூபர், தேர்தல் கருத்துக்கணிப்பை வெளியிடுபவர் என சொல்லி திருநாவுக்கரசர் செல்போனில் பேசினார். அப்போது அவர் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் இதற்காக ரூ.35 கோடி வரை பேரம் பேசினார்.

மேலும் இது பற்றி வெளியில் கூறினார் குடும்பத்தினர் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டல் விடுத்ததாக புகாரில் கூறியிருந்தார். மேலும் இதில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் யூடியூபர் திருநாவுக்கரசு, கார்த்திக், ரமேஷ், தியாகராஜன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

ரூ.1 லட்சம் பறிமுதல் இதில் கார்த்திக் மற்றும் ரமேஷை போலீசார் கரூர் சென்று கைது செய்தனர். இதில் கார்த்திக் என்பவர் கரூர் திமுகவின் விளையாட்டு அணி மாநில துணைப் பொதுச்செயலர் என கூறப்படுகிறது. அசோக் குமாருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதால் கரூரில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு அவர் இல்லை. இதையடுத்து கரூரில் உள்ள சக்தி மெஸ்சில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கார்த்திக் மற்றும் ரமேஷின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ரூ.1 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் கூறினர்.

வலைவீசி தேடும் போலீஸ் இதையடுத்து போலீசார் கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அசோக் குமாரை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வருகின்றனர். அசோக்குமார் சென்னையில் இருக்கும் போது, ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் சந்தித்து பேசியதாகவும், தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசுங்கள் என்று சொல்லியதாகவும் கூறப்படுகிறது. இதை வைத்தே அசோக்குமாரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பேருந்து மோதி மீன் வியாபாரி பலி

finhelvantaan

பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர் பொலிஸாரால் தேடப்படும் இளைஞன்!

finhelvantaan

இன்றைய வானிலை Pothikai.fm 2025.05.22

Leave a Comment