தென்னிந்திய திரை உலகில் பழம்பெறும் பாடகியான ஜமுனா ராணி 88 வயதில் நேற்று ( ஜூலை 30) பெங்களூரில் காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று மதியம் கல்லஹள்ளி என்ற இடத்தில் நடைபெற உள்ளது. மறைந்த பாடகி ஜானகியின் நெருங்கிய தோழியான ஜமுனா ராணி ஜானகி இறந்த சில வாரங்களில் காலமாகி இருப்பது ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் 6000-க்கும் மேற்பட்ட பாடல்களை ஜமுனா ராணி பாடி இருக்கிறார். தன்னுடைய 7வது வயதிலேயே தியாகய்யா என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக நுழைந்து இருக்கிறார்.

பாடகி ஜமுனா ராணி பாடிய பாடல்கள் பாடகி ஜானகி எப்படி குழந்தைத்தனமான பாடலுக்கு சொந்தக்காரரோ, அதேபோலத்தான் இவரும் குழந்தை தனமான குறலுக்கு சொந்தக்காரராக இருந்திருக்கிறார். தமிழில் 1952-ல் வெளிவந்த கல்யாணி என்ற படத்தின் மூலம்தான் முதல் முதலில் பாடினார். அதற்குப் பிறகு காலை வயசு கட்டான சைசு, பாட்டு ஒன்று கேட்பேன், குங்குமப்பூவே கொஞ்சு புறாவே, செந்தமிழ் தேன் மொழியாள், சின்ன சின்ன சிட்டு உட்பட அந்த காலத்தில் பல பாடல்களை பாடியுள்ளார். அதுபோல மணிரத்தினம் இயக்கத்தில் உருவான நாயகன் படத்தில் வரும் நான் சிரித்தால் தீபாவளி பாடலை பாடியவர் இவர்தான்.
