July 31, 2026
இலங்கை

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு

இன்று காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கொழும்பு – புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களின் 152ஆவது ஆண்டு ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு, காவல்துறையினர் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர்.அதற்கமைய, தேர்பவனி காரணமாக குறித்த பகுதிகளில் இன்று காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயம், காலி வீதி, காலி முகத்திடல், செத்தம் வீதி, யோர்க் வீதி, பிரதான வீதி, செட்டி வீதி, கதிரேசன் வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.

இதனால் குறிப்பிட்ட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதனால், வாகன சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

விருதுநகர் மாவட்டம்.. ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயம்

finhelvantaan

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை சலுகை விலையில்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சந்தித்தார் மெகசின் சிறையிலுள்ள சமன் ஏக்கநாயக்கவை

finhelvantaan

Leave a Comment