July 31, 2026
இலங்கைஇன்றைய ராசிபலன்தமிழ்நாடு

இன்றைய ராசிபலன் மேஷம் முதல் மீனம் ஜூலை 31/07/2026 வெள்ளி

மேஷ ராசி

எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும் நாள். அரசியல்வாதியின் பழக்கம் நன்மையை தரும். தொழில்துறையில் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு தொழிலுக்கு உதவியாக இருக்கும். வடக்கு திசையில் இருந்து ஒரு நல்ல செய்தி வரும். வேலை இடத்தில் மரியாதை உண்டாகும். பணி நியமன கடிதம் வந்து சேரும்.   அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்தது நிறைவேறும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள்.

ரிஷப ராசி

உயர்வான செய்திகள் வந்து சேரும் நாள். மேலதிகாரி பாராட்டு உங்களை உற்சாகப்படுத்தும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். தொழிலில் சிறப்பான வாய்ப்புகள் அமையும். வருமானம் அதிகரித்து கையிருப்பு கூடும். வியாபாரம் சிறப்பாக நடக்கும். தொழில் சம்பந்தப்பட்ட உதவிகள் கிடைக்கும். யோக பலன் அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நல்ல காரியங்கள் நடக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லாபம் பெறுவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மரியாதை அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: புதிய முறையில் வியாபாரத்தை பெருக்கும் திட்டம் செம்மையாக செயல்படுத்தப்படும். அதற்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும்.

மிதுன ராசி

சற்று மந்தமான பலன்கள் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் சின்ன சின்ன இடையூறுகள் உண்டாகும். வருமானத்தில் சுணக்க நிலை ஏற்படும். வெளியூரில் இருந்து வரவேண்டிய செய்தி தாமதமாகும். நண்பர்களுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  பூர்வீக சொத்தில் சில சிக்கல்கள் உண்டாகும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றும். பண வரவு சற்று குறைவாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன சஞ்சலம் அடைவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செலவுகள் அதிகரிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன தைரியம் குறையும்.

கடக ராசி

மேன்மையான பலன்கள் தேடி வரும் நாள். வியாபாரத்தில் வருமானம் அதிகரித்து பணவரவு கூடும். தொழிலில் இருந்த போட்டிகள் மறைந்து போகும். வேலை இடத்தில் பாராட்டும் பெருமையும் கிடைக்கும். கையிருப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அரசு வேலையில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளியூர் பயணங்களில் மூலம் நன்மை கிடைக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் அடைவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை உயர்வு பெறுவார்கள்

சிம்மராசி

சில எதிர்ப்புகளை சந்திக்கும் நாள் இன்று. வேலை இடத்தில் கடுமையாக உழைப்பை கொடுத்தாலும் அதற்கான பலன் குறைவு. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பது கடினம். சம்பள விஷயத்தில் மனதிருப்பி இருக்காது. வியாபாரத்தில் மிதமான போக்கை காணப்படும். தொழிலில் புதிய முதலீடுகளை கவனமாகவும் நிதானமாகவும் செய்ய வேண்டும்.  குலதெய்வத்தினுடைய அருள் கிட்டும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய தாமதம் அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன அமைதி குறையும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண வரவு மந்தமாகும்.

கன்னி ராசி

 சுபிட்சமான தகவல்கள் கிடைக்கும் நாள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும் அளவில் உங்கள் திறமையும் நேர்மையும் வெளிப்படும். அரசாங்க வேலையில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வங்கி இருப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்தது நடக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விரும்பியதை அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனலாபம் பெறுவார்கள்.

துலாம் ராசி

சுப காரியம் காரியங்கள் நடக்கும் நாள். திருமண பேச்சு வார்த்தை கை கூடி வரும் தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து போகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக ஆதாயம் உண்டாகும். வருமானம் அதிகரித்து கையிருப்பு கூடும். அலுவலகத்தில் பதவி உயர்வு ஏற்படும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை இருக்கும். இறைவன் அருளால் நல்லது நடக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி பூமி லாபம் உண்டாகும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் தன லாபம் கிடைக்கும் . இன்று உங்கள் பலம்: தொழில்நுட்ப உதவியோடு வியாபாரத்தை அணுகுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பு பலம் தரும்.

விருச்சிக ராசி

எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக நடக்கும் நாள். வருமானம் ஏற்றம் இரக்கமாக இருக்கும். தொழில் துறையில் எதிர்ப்புகள் தோன்றி மறையும். வேலைப்பளு அதிகரித்து மன அழுத்தம் கூடும். அரசு அலுவலகங்களில் வேலை தாமதமாக. வியாபாரத்தில் இருந்த மந்த நிலை ஏற்படும். பொருள் வரவு குறைவாக இருக்கும். வீட்டில்  சச்சரவுகள் ஏற்படும். கடன் சுமை குறையும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்ப்புகள் ஏற்படலாம். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தன லாபம் குறையலாம். கேட்டை நட்சத்திரக்காரர்கள் நித்திரை சுகம் கெடலாம்.

தனுசு ராசி

எதிர்பார்த்த வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். தொழில் புதிய தொழில்நுட்பம் கையாளப்படும். அது தொழிலை உறுதிப்படுத்த உதவியாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். பண வரவு அதிகரிக்கும் கையிருப்பு கூடும். உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு கேட்டது கிடைக்கும். பூராட நட்சத்திரக்காரர்கள் விரும்பியது நடக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வாகன ஆசை நிறைவேறும்.

மகர ராசி

நல்ல செயல்கள் நடக்கும் நாள். தேவையான நேரத்தில் அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். பங்குச்சந்தையில் லாபம் அதிகரிக்கும். பார்ட்னர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் விரிவடைந்து வருமானம் பெருகும். வெளியூர் பயணங்களில் நல்ல பலன் கிடைக்கும். உடல் நலம் சீராக இருக்கும். வேலை இடத்தில் மரியாதை கிடைக்கும். குலதெய்வத்தினுடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு தேவைகள் நிறைவேறும். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு விரும்பியது நடக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்குப் பெருகும். இன்று உங்கள் பலம்: எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். நண்பர்களின் உதவி மன பலத்தை அதிகரிக்கும்.

கும்ப ராசி

 குழப்பமான நிலை ஏற்படும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். தொழிலில் போட்டியாளர்களின் தலையீடு சிரமத்தை கொடுக்கும். குடும்பத்தில் ஏதோ ஒரு காரணத்தால் மனக்குழப்பம் உண்டாகும். வேலை இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்காது. மேலதிகாரிகளின் கோபம் மன உளைச்சலை உண்டாக்கும். வாகனப் பழுது ஏற்பட்டு சிரமத்தை கொடுக்கும். குலதெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பார்த்தது தாமதமாகும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு பூமி அனாவசிய செலவு கூடும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: வருவது வரட்டும் என்று வியாபாரத்தில் கவனம் செலுத்துவது. நெருங்கிய நண்பரின் உதவி கிடைப்பது.

மீன ராசி

சிறப்பான பலன்கள் நடக்கும் நாள். தொழிலில் எதிர்பாராத நன்மை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இடத்தில் பதவி உயர்வு, பணி மாறுதல் உத்தரவு வந்து சேரும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கையில் பணம் தாராளமாக புரளும். உங்கள் சொல்லுக்கு மரியாதை ஏற்படும். நண்பர்களின் உதவி தக்க நேரத்தில் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உயர்வு உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பண வரவு அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் எண்ணங்கள் நிறைவேறும். இன்று உங்கள் பலம்: அரசியல்வாதியின் நட்பு புதிய பழம் சேர்க்கும். உறவினர்களின் ஒத்தாசை சிறப்பாக இருக்கும்.

Related posts

சிபிஐ அனுப்பிய சம்மனில் ட்விஸ்ட் விஜய் குற்றவாளி இல்லை. ஆனாலும் ஒரு சிக்கல்

finhelvantaan

அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்-35 போர் விமானத்தை தாக்கியதாக ஈரான் அறிவிப்பு

finhelvantaan

ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பிள்ளையானுக்கு தகவல் தெரிந்துள்ளது

Leave a Comment