30.8 C
Chennai
July 31, 2026
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் வயல் நிலங்களுக்கு தீ வைப்பதால் பேராபத்து

நாட்டின் பல பகுதிகளில் அறுவடைப் பருவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வயல் நிலங்களில் எஞ்சியிருக்கும் வைக்கோலுக்குத் தீ வைக்கும் நடவடிக்கை அதிகரித்து வருகின்றது.

இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அழிந்து மண் வளம் முற்றாகச் சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சூழலியலாளர்களும் விவசாய நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், புகையின் தாக்கம் மற்றும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக காடோரப் பகுதிகளில் உள்ள யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் சூழல் உருவாகி, மனித-யானை மோதல்களும் தீவிரமடைந்து வருகின்றன.

பேராபத்து

அறுவடைக்குப் பின் வைக்கோலை எரிப்பது தற்காலிகத் தீர்வாகத் தோன்றினாலும் நீண்டகால அடிப்படையில் அது விவசாய நிலத்தையே தரிசாக்கி விடும்.

இதற்கு தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான மாற்று வழிகளை உடனடியாக அமல்படுத்துவது அவசியமாகும்.’ என சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆவா கும்பலைச் சேர்ந்த நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாண நபர்கள் தொடர்பில்

finhelvantaan

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் மாறுவேடத்தில் புரிந்தவருக்கு நேர்ந்த கதி

finhelvantaan

பலமுறை சீரழிக்கப்பட்ட இளம் குடும்பப்பெண் மனைவியை பணயம் வைத்துச் சூதாடி தோற்ற கணவன்

finhelvantaan

Leave a Comment