July 31, 2026
இலங்கைசர்வதேசம்

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்… ஈராக் மீது கூட்டுத் தாக்குதல்!

அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஜோர்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஃபொக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய அவர், “நாங்கள் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்குவோம் அவர்கள் பலத்த அடியை வாங்குவார்கள்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கூட்டுத் தாக்குதல்

இதற்கிடையே, சவூதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈராக்கில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய குழுக்கள் மீது அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இணைந்து இரவோடு இரவாகக் கூட்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியள்ளன.

இந்தத் திடீர் தாக்குதல்களாலும், இரு நாட்டு அதிகாரிகளின் தீவிரமான எச்சரிக்கைகளாலும் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இருப்பினும், வெள்ளை மாளிகையின் தற்போதைய நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் எதுவுமில்லை என்றே தெரிகிறது.

இராணுவ ரீதியிலான அழுத்தத்தையும் பொருளாதாரத் தடைகளையும் தொடர்ந்து பராமரித்து வரும் அதே வேளையில், ஈரானுடன் இராஜதந்திர ரீதியிலான அமைதி பேச்சுவார்த்தைக்குத் தாங்கள் “மிக மிக அருகில்” இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Related posts

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் சஜித் சந்திப்பு

finhelvantaan

கோபத்தில் உச்சத்திற்கு போன டிரம்ப்! திக் திக் உலக நாடுகள்

finhelvantaan

பலமுறை சீரழிக்கப்பட்ட இளம் குடும்பப்பெண் மனைவியை பணயம் வைத்துச் சூதாடி தோற்ற கணவன்

finhelvantaan

Leave a Comment