July 28, 2026
இலங்கை

இன்றைய வானிலை | 28 ஜூலை 2026 | செவ்வாய்க்கிழமை

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரித்துக் காணப்படும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.

கடல் பிராந்தியங்களில்


நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கல்பிட்டி தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் கல்பிட்டி தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.

Related posts

இன்றைய ராசி பொதுபலன் மேஷம் முதல் மீனம் வரை  ஜனவரி  25/03/2026

finhelvantaan

இலங்கையின் பேரினவாதத்தின் கடும் போக்காளர் சரத் வீரசேகர கூறியுள்ளார் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டாம்…

finhelvantaan

இன்றைய வானிலை 17/01/2026

finhelvantaan

Leave a Comment