நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதுடன், உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரண நிதி மற்றும் அரசு வேலைகள் ஆகியவற்றை அவர் அறிவிப்பார் என தெரிகிறது.
கரூர் சம்பவம் தொடர்பில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக திமுக வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது,
முதலமைச்சர் விஜய் வருகிற 10ம் தேதி கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதுடன், உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரண நிதி மற்றும் அரசு வேலைகள் ஆகியவற்றை அவர் அறிவிப்பார் என தெரிகிறது.

வழக்கில் முதல்வர் குற்றவாளி கிடையாது நிகழ்வின்போது கரூரில் என்ன நடந்தது என விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல்குமர் போன்ற அமைச்சர்கள் பேச வாய்ப்பிருக்கிறது. அப்படி பேசினால் அது தங்களுக்கு பின்னடைவாக அமையும் என திமுக கருதுகிறது.
எனவே, கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என் ஆனந்த், சிடி நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பொதுவெளியில் பேசக்கூடாது என நேற்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதோடு, இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த வழக்கை ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார்.

நீங்கள் பேச்சு சுதந்திரத்திற்கு தடை கேட்கிறீர்களா?.. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் போது நாங்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? என நீதிபதி திமுக தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.மேலும் கரூரில் மக்களை சந்திப்பது என்பது முதல்வரின் முடிவு.. அதை தடுக்க முடியாது.. இந்த வழக்கில் முதல்வர் குற்றவாளி கிடையாது.. நீங்கள் இந்த நீதிமன்றத்தை அரசியல் அரங்கமாக மாற்றாதீர்கள் என்று நீதிபதி கண்டித்தார்.

இந்த மனுவை நீங்கள் வலியுறுத்தாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது. நாங்கள் இந்த மனுவை தள்ளுபடி செய்ய விரும்புகிறோம் என நீதிபதி கூறியதை அடுத்து , திமுக வழக்கறிஞர் அந்த மனுவை வாபஸ் பெறுவதாக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
