ஒரே மாதத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
ஐரோப்பா முழுவதும் உக்கிரமடைந்துள்ள கடுமையான வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஒரே மாதத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உயிரிழப்பு எண்ணிக்கை தற்காலிகமானது என்றும், வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்தந்த நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஐரோப்பிய வரலாற்றில் பதிவான மிக மோசமான வெப்ப அலை உள்கட்டமைப்பை உலுக்கிய வெப்ப அலை கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நீடித்த இந்த வெப்ப அலையே, ஐரோப்பிய வரலாற்றில் பதிவான மிக மோசமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.மின் உற்பத்தி, நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகள்,வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த கொடூரமான சூழ்நிலைக்கு உலகளாவிய காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் ஆரம்பகட்ட தரவுகள் மட்டுமே என்பதால், உண்மையான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுன்றது.
