July 21, 2026
இலங்கை

இளம் தம்பதி செய்த மோசமான செயலால் வீடுகளுக்குள் புகுந்து அரங்கேற்றிய சம்பவம்

தொடர்ச்சியாக திருடி வந்த கணவன் மற்றும் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை தொடர்ச்சியாக திருடி வந்த கணவன் மற்றும் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விநாயகபுரம் பகுதியில் வைத்து 24 வயதுடைய கணவரும் 20 வயதுடைய மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர்கள் கிளிநொச்சி உதயநகர், அம்பாள்குளம், விநாயகபுரம், சாந்தபுரம் மற்றும் கனகாம்பிகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 09 வீடுகளுக்குள் பகல் நேரங்களில் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட 10 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் மற்றும் தொலைபேசிகள், தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும் நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Related posts

இன்றைய வானிலை 31/03/2026

finhelvantaan

அமெரிக்காவை வம்பிழுக்கும் வடகொரியா! கிம் ஜாங் பெரும் பதற்றம்

finhelvantaan

இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜரானார் உதய கம்மன்பில

finhelvantaan

Leave a Comment