July 22, 2026
இலங்கை

இன்றைய வானிலை 31/03/2026

இன்றைய வானிலை
2026.03.31

நாடு முழுவதிலும் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் வதுளை மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்


நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.

Related posts

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 26 ம் தேதி புயலாக மாற வாய்ப்பு..

finhelvantaan

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை “ஆப்​பிரிக்​கர்​கள் அருவருப்பானவர்கள்” 

finhelvantaan

பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் விழா நல்லூர் சிவன் கோவிலில் திருவெம்பாவை

finhelvantaan

Leave a Comment