யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கௌரவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜாவிற்கு ‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்” எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.நிகழ்வின்போதே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா இலங்கைணின் வானிலை தொடர்பில் அண்மைய காலங்களில் முக்கியமான பல முன்னறிவிப்புகளை கணித்து மக்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டித்வா சூறாவளி காலப்பகுதியில் இடம்பெறவுள்ள அனர்த்தங்கள் மட்டுமின்றி இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது தொடர்பான முன் எச்சரிக்கைகளையும் வழங்கியிருந்தார்.இதன்படி அண்மையில் திருகோணமலை முல்லைத்தீவு கடற்பரப்புகளில் 3.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடதக்கது.

