உதயநிதி பேசியதை பதிவு செய்து வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட உளவுத்துறையினர் சென்னை உள்ள மேலிடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தையும் கடந்து டெல்லி வரை பேசு பொருளானது. தஞ்சையில் உதயநிதி பேசியதை பதிவு செய்து வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட உளவுத்துறையினர் சென்னை உள்ள மேலிடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு அப்போதே எடுத்துச் சென்ற நிலையில், இது குறித்து தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் விவாதித்துள்ளார் முதல்வர் விஜய். அந்த ஆலோசனையின் முடிவில், வழக்குப் பதிவு செய்யப்பட்டால் முன் ஜாமீன் மூவ் பண்ணுவார்கள்.

முன் ஜாமீனும் கிடைக்கக் கூடும். ஆனால், முன் ஜாமீன் மூவ் ஆகி அதன் ரிசல்ட் வருவதற்குள் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்ல முடியும் என்று அதிகாரி கள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விசயத்தில் சட்டம் தனது கடமை யை செய்யட்டும். எந்த சூழலிலும் கெடுபிடி காட்டாதீர்கள். சட்டரீதியாக இருப்பதை மட்டும் பயன்படுத்துங்கள். இதில் கைது தேவைப்படாது என நினைத்தால் கைது செய்ய வேண்டாம் என்று முதல்வர் விஜய் வலியுறுத்திய தாக கோட்டை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, மனுதாரரை உதயநிதி ரிமாண்ட் செய்யும் நோக்கம் எதுவும் எங்களுக்கு இல்லை. விசாரணைக்காக மட்டுமே அழைத்துச் செல்லப்படு கிறார் என்று நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சொல்லிய நிலையில், மனுதாரரை இன்றே காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி இளந்திரையன்.
திமுக மூத்த வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசிய போது, ”நாளை நடக்கும் பட்ஜெட் கூட்டத்தில் உதயநிதி கலந்துகொள்ளக்கூடாது என அரசு தலைமை திட்டமிட்டிருந்தது. ஒரு நாள் ஒரே ஒரு நாளாவது உதயநிதிக்கு ஜெயில் வாசத்தைக் காட்ட வேண்டும் என நினைத்தனர். அதனால் தான் ஜாமீனில் வர முடியாத செக்சன்கள் எல்லாம் வழக்கில் சேர்த்துள்ளனர். உதயநிதி பேச்சை எந்த வடிவத்தில் கவனித்தாலும் அவதூறு வழக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். அப்படியிருக்கையில் கடுமையான 9 செக்சன்களில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஜெயிலில் தள்ளும் நோக்கம் தானே? நீதிமன்றம் தலையிட்டதால் , எங்களுக்கு ரிமாண்ட் செய்யும் நோக்கம் எதுவும் இல்லை என அரசு சொல்லி தப்பிக்கப்பார்த்துள்ளது. அவர்களின் நோக்கம் உதயநிதி யை ரிமாண்ட் செய்யவேண்டும். பட்ஜெட் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளக் கூடாது என்பது தான் திட்டம்” என்கிறார்கள்.

வழக்கு பின்னணி என்ன? காவரி நதிநீர் பிரச்சனை மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே, கூட்டத்தில் இருந்த சிலர் எழுப்பிய கோஷங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட சில கருத்துக்களைத் தெரிவித்தார். அந்த பேச்சு, பெண்களை அவமதிக்கும் வகையிலும் நாகரிகமற்ற இரட்டை அர்த்த

தொனியிலும் அமைந்திருந்ததாகக் கூறி, உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியது. உதயநிதி ஸ்டாலின் பேசிய சில கருத்துகள் எல்லை தாண்டியதாகவும், கண்ணியமற்ற முறையில் அமைந்ததாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன. உதயநிதி பெண்களை அவமதித்து விட்டதாக கூறி, தமிழக வெற்றி கழகம் மாநிலம் தழுவிய அளவில் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. உதயநிதியின் பேச்சில் சில விஷயங்கள் நாகரிகமற்றது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தவெக தற்போது கையிலெடுத்துள்ள இந்த கைது முறை பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
