August 3, 2026
இலங்கைஇன்றைய ராசிபலன்தமிழ்நாடு

இன்றைய ராசிபலன் மேஷம் முதல் மீனம் ஆகஸ்ட் 03/08/ 2026 திங்கட்கிழமை

மேஷ ராசி

யோக பலன் அதிக அளவில் நடக்கும் நாள். பழக்கவழக்கங்களின் மூலம் தொழில் முன்னேற்றம் காணும். வியாபாரத்தில் உயர்வான பலன் உண்டாகும். பங்குச்சந்தை மூலம் பண வரவு உண்டாகும். மனைவியின் உடல்நிலை முன்னேற்றம் காணும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். அவசியமான நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். தெற்கு திசையில் இருந்து ஒரு நல்ல செய்தி வரும். உடன் பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். பண வரவுகளில் தடை ஏற்படாது. நல்ல பலன்கள் உண்டாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் பெறுவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன வெற்றி அடைவார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் மேன்மை பெறுவார்கள்.

ரிஷப ராசி

முன்னேற்றகரமான  செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டாகும். பூர்வீக சொத்து மீது இருந்த வில்லங்கம் விலகி உங்களுக்கு வந்து சேரும். வியாபாரம் சூடு பிடிக்கும். சில தொழில் சம்பந்தப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும். தாய் தந்தையர் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் விறுவிறுப்பாக நடக்கும். தொழில்துறையிலிருந்து பிரச்சனைகள் நீங்கும். வேலை இடத்தில் மரியாதையும் அந்தஸ்தும் உயரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண வரவு அதிகரிக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை பெறுவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள்.

மிதுன ராசி

ராஜ யோகம் தேடி வரும் நாள். வேலை உயர்வு கிடைத்து சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டு செலவுகளை சமாளிப்பீர்கள். வருமானம் உயர்வு ஏற்பட்டு கையில் பணம் புரளும். வியாபாரத்தில் லாபம் கிடைத்து முக்கிய கடன் அடைபடும். நீண்ட நாள் வராத பணம் வசூலாகும். வெளியூரிலிருந்து  நல்ல செய்தி வந்து சேரும். உறவினர் உங்களுக்கு தக்க துணையாக இருப்பார் . பண வரவு அதிகரித்து செல்வாக்கு பெருகும். வியாபாரத்தில் உயர்வு உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை பெறுவார்கள்.

கடக ராசி

நன்மைகள் அதிகமாக வந்து சேரும் நாள். இன்று தொழில் சிறப்பான முறையில் நடக்கும். வியாபாரத்தில் விறுவிறுப்பு கூடி வருமானம் அதிகரிக்கும். அலுவலகத்தில்  வேலைத் திறன் வெளிப்பட்டு மதிப்பு அதிகரிக்கும். வங்கியில் பண இருப்பு உயரும். மேலதிகாரிகளின் அனுசரணையான போக்கு வெளிப்படும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளியூர் பயணங்களின் மூலம் தொழில் லாபம் அதிகரிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் அடைவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தானிய விருத்தி பெறுவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகழ் அடைவார்கள்.

சிம்மராசி

எதிர்பாராத பலன்கள் நடக்கும் நாள் இன்று. உங்களின் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து நிற்கும். வேலை பார்க்கும் இடத்தில் சிறப்பு கிடைக்கும். பதவி மாற்றம் உண்டாகும். சம்பள அதிகரித்து மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் அதிக லாபம் வந்து சேரும். தொழில்துறையில் இருந்த போட்டிகள் மறைந்து போகும். பழைய நேர்த்திக்கடன் நிறைவேறும். குலதெய்வத்தினுடைய அருள் கிடைக்கும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல பலன் அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை உயர்வு பெறுவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணிகலன் சேர்க்கை அடைவார்கள்.

கன்னி ராசி

திருப்திகரமான செய்திகள் கிடைக்கும் நாள். அலுவலகத்தில் திறமை வெளிப்பட்டு பாராட்டு கிடைக்கும். புதிய முயற்சியில் வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். வேலை இடத்தில் உங்கள் திறமை அதிகமாக வெளிப்படும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட வியாபார நெருக்கடி விலகும். பொருளாதார உயர்வு வங்கி இருப்பை அதிகரிக்கும். கடன் சுமைகள் கட்டுக்குள் வரும். செலவுகள் குறைந்து வருமானம் பெருகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குலதெய்வத்தின் அருள் பூரணமாக இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  வெற்றி பெறுவார்கள்.

துலாம் ராசி

நல்ல காரியங்கள்  நடக்கும் நாள். மனதளவில் திட்டம் போட்டு தொழிலை நடத்துவீர்கள். நீண்ட தூர பயணங்கள் லாபத்தை கொண்டு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத உயர்வு உண்டாகும். ஆன்லைன் வர்த்தகத்தில் சிறப்பான வருமானம் கிடைக்கும். வியாபாரம் அதிகரித்து கையிருப்பு கூடும். வேலை இடத்தில் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டும். உங்கள் உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு செல்வம் பெருகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி வாய்ப்பு குவியும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் அந்தஸ்து உயரும். இன்று உங்கள் பலம்: செயல் திறனும் தொழில் அறிவும் வியாபாரத்திற்கு பலம் சேர்க்கும். அரசு உதவிகள் வந்து சேரும்.

விருச்சிக ராசி

உயர்வான நன்மைகள் வந்து சேரும் நாள்.  தொழில்துறையில் மிகுந்த முன்னேற்றமான பலன் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். தன லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். வேலை இடத்தில் சில நல்ல பலன் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பு ஊக்கம் தரும். குலதெய்வத்தின் அருளால் உடல்நலம் மேம்படும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு உயர்வான நன்மை ஏற்படும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வருமானம் அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பண உதவி வந்து சேரும்.

தனுசு ராசி

உயர்வான செய்தி கிடைக்கும் நாள். உழைப்பும் சுறுசுறுப்பும் தொழிலில் வருமானத்தை குவிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் லாபத்தை கொண்டு வரும். வேலையில் உள்ளவர்களுக்கு வேலை உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனை சாதகமாக முடியும். எதிர்பாராத சில நல்ல காரியங்கள் நடக்கும். தொழிலுக்கு இருந்த எதிர்ப்புகள் மறையும். தெற்கு திசையில் இருந்து முக்கிய செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மனை இடம் வாய்க்கும். பூராடம் நட்சத்திரக்காரர்கள்  பண வரவு கூடும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வாகன யோகம் உண்டாகும்.

மகர ராசி

நன்மைகள் வந்து சேரும் நாள். தொழிலில் அபிரிமிதமான லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வருமானம் கூடி பணப்புழக்கம் ஏற்படும். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். குலதெய்வத்தில் அருள் பரிபூரணமாக இருக்கும். பதவி உயர்வு உண்டாகும்.  சம்பளம் அதிகரித்து பண தேவை பூர்த்தியாகும். வேலையிட மாறுதலும் ஏற்படலாம். பொருளாதார உயர்வு உண்டாகும். வீட்டுமனை வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு பெருகும். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சம்பளம் அதிகரிக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வெற்றி கிடைக்கும்.

கும்ப ராசி

எதிர்பார்த்த செய்திகள் வரும் நாள். தொழில் வெற்றி உண்டாகும். வருமான அதிகரிப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். செல்வ பெருக்கு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் தக்க சமயத்தில் வந்து சேரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். வேலை இடத்தில் உங்கள் பேச்சுக்கு தனித்தன்மை உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பு வந்து சேரும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு கையில் பணம் புரளும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வங்கியிருப்பு கூடும்.

மீன ராசி

சிறப்பான பலன் நடக்கும் நாள். எதிர்பாராத லாபம் வியாபாரத்தில் கிடைக்கும். தொழிலில் புதிய வேகம் பிறக்கும். மறைமுகமான எதிர்ப்புகள் மறைந்து போகும். அலுவலகத்தில் உங்கள் வேலைத் திறன் வெளிப்படும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சுமூகமான நிலை உண்டாகும். வீட்டில் மனைவியின் அன்பு குதூகலத்தை ஏற்படும். வருமானம் பெருகி கடன்கள் அடைபடும். உறவினர்களின் உதவி கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல காரியம் நடக்கும் . உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் செல்வப் பெருக்கு உண்டாகும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் வெளிநாட்டு உதவி பெறுவார்கள்.

Related posts

சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் சிறந்த நிலையில் உள்ளது இலங்கைக்கு

finhelvantaan

போதையின் உச்சத்தில் கணவன் மனைவி மாறி மாறி உடலுறவில் ஈடுபடும் அதிர்ச்சி நிகழ்வுகளும் நடந்துள்ளன

finhelvantaan

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் தமிழரசுக்கட்சியுடன் இணைய தயாராக

Leave a Comment