30.4 C
Chennai
August 2, 2026
இலங்கை

கடும் நடவடிக்கை SLS சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்களுக்கு 

வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

SLS தரச்சான்றிதழ் இன்றி மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காணும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்வோர் மற்றும் விற்பனை செய்வோர் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

தரமற்ற தலைக்கவசங்களை அணிவது, தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதற்கு இணையான ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக SLS தரச்சான்றிதழ் பெற்ற தரமான தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

புதிய விளக்கம் அந்தர் பல்டி அடித்த டிரம்ப். உற்று பார்க்கும் உலக நாடுகள்

finhelvantaan

வாகன விலைகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட செய்தி

finhelvantaan

மேயர் உட்பட நால்வரைக் கைது செய்ய உத்தரவு வவுனியா மாநகரசபை சொத்துகள் மாயம்

finhelvantaan

Leave a Comment