July 23, 2026
இந்தியாஇலங்கை

இந்தியாவின் மொத்த கடன் ₹201.17 லட்சம் கோடி..! ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்!

தமிழகத்தின் நிதிநிலை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் மொத்த கடன் பொறுப்பு 13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் நேரடி கடன் ரூ.10 லட்சம் கோடி எனவும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.3.12 லட்சம் கோடி எனவும் சொல்லப்பட்டிருந்தது.

தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு தனி நபர் மீதான கடன் சுமை ரூ.1,28,934 என கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த வாகாரம் விவாதத்துக்கு உள்ளானது..

இந்நிலையில், இந்தியாவின் மொத்த கடன் பற்றி ஒன்றிய அரசு மாநிலங்களவையில் முக்கிய தகவலை கூறியிருக்கிறது. ஒன்றிய அரசின் மொத்த கடன் சுமை 2025 – 26 நிதியாண்டில் 8 சதவீதம் உயர்ந்து 201.17 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
இதில் உள்நாட்டு கடன் மட்டுமே ஒரு 173.55 லட்சம் கோடி எனவும், கடன் அதிகரிப்பால் அரசு செலுத்தும் ஆண்டு வட்டி தொகை ரூ.12.43 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

Related posts

ஹெலிகொப்டர் விபத்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது வென்னப்புவ பகுதியில்

finhelvantaan

நெதன்யாகு அடுத்து நடக்கப்போவது என்ன கலைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றம்

finhelvantaan

இன்றைய வானிலை 05/06/2026

finhelvantaan

Leave a Comment