July 18, 2026
ஆன்மீகம்இலங்கை

மாவைக் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை (19.07.2026) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

மகோற்சவ காலத்தில் தினமும் விசேட பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் உற்சவ நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகளில், ஆகஸ்ட் 10ஆம் திகதி திங்கட்கிழமை சப்பறத் திருவிழாவும், 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பஞ்சரதப் பவனியும், 12ஆம் திகதி புதன்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு வருடாந்தத் திருவிழாவின் பிரதான உற்சவ நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இதனைத் தொடர்ந்து 13ஆம் திகதி வியாழக்கிழமை மாம்பழத் திருவிழாவும், 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கப்பல் திருவிழாவும், 15ஆம் திகதி சனிக்கிழமை பூங்காவனத் திருவிழாவும் சிறப்பாக நடைபெறவுள்ளன.

இந்த மகோற்சவத்தில் யாழ்ப்பாணம் மட்டுமன்றி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

 எரிபொருள் மானியம் வழங்கப்படும் இம்மாதம் முதல் நலிந்த ஜெயதிஸ

finhelvantaan

அயிரை மீன்கள்! தம்மாதுண்டு மீனில் இத்தனை சத்துகளா?

finhelvantaan

இலங்கை மக்களுக்கு துணைநிற்க தமிழ்நாடு தயார்”: முதல்வர் ஸ்டாலின்

finhelvantaan

Leave a Comment