July 6, 2026
இலங்கை

தலைதெறிக்க ஓட்டம் யாழில் மணல் கொள்ளையர்கள்

உழவு இயந்திரத்தை வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸாரை கண்டு, வீதியில் மண்ணை பறித்த வண்ணம் தப்பி ஓடியுள்ளனர். நீண்ட தூரம் துரத்தி சென்ற பொலிஸார் குறித்த உழவு இயந்திரத்தை வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை பொலிஸார் மறித்த வேளை, பொலிசாரின் கட்டளையை மீறி உழவு இயந்திரம் பயணித்துள்ளது.

உழவு இயந்திரத்தை கைப்பற்றிய பொலிஸார் அதனை பொலிஸார் துரத்தி சென்ற வேளை ,பொலிஸார் தம்மை பின் தொடர்வதை தடுக்கும் நோக்குடன் , வீதியில் மண்ணை பறித்த வண்ணம் உழவு இயந்திரத்தில் தப்பி சென்றுள்ளனர்பொலிஸாரும் நீண்ட தூரம் உழவு இயந்திரத்தை பின் தொடர்ந்து துரத்தி சென்ற நிலையில் , வீதியில் உழவு இயந்திரத்தை கைவிட்டு , அதன் சாரதியும் அதில் பயணித்தவர்களும் தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் உழவு இயந்திரத்தை கைப்பற்றியுள்ள பொலிஸார் , அதன் சாரதியையும் , அதில் பயணித்த நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

நீர்ப்பாசனத் திணைக்களம் 16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

finhelvantaan

அவசர எச்சரிக்கை; பதற்றத்தில் வளைகுடா நாடுகள் இஸ்ரேலில் விழுந்த ஏவுகணை

finhelvantaan

யமுனை நதி தந்த அதிசயம் சத்தியவதி: மீன் வயிற்றில் உதித்த மர்ம மலர்

finhelvantaan

Leave a Comment