31.5 C
Chennai
July 4, 2026
இலங்கைதமிழ்நாடு

அர்லேகரை சந்தித்த திமுக புள்ளிகள்.. தவெக அரசுக்கு எதிரான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுடன்

அனிதா ராதாகிருஷ்ணன் மிரட்டப்பட்டது தொடர்பாக ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது.

தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து திமுக பிரதிநிதிகள் புகார் கடிதம் அளித்துள்ளனர். அமைச்சரவை கூட்டத்தில் தனி நபர்கள் பங்கேற்றது, குதிரை பேரம், திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மிரட்டப்பட்டது தொடர்பாக ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சந்தித்தனர். தவெக வெளிப்படையாக குதிரை பேரம் நடத்துவதாக ஆளுநரிடம் திமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

மேலும், திமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் மிரட்டியதாகவும் ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது. குதிரை பேரம், அனிதா ராதாகிருஷ்ணனை மிரட்டிய விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.குரங்குகளை ஏற்றுமதி செய்வது

ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது

பரந்தன் வீதியில் ஈரமான நெல் மூட்டைகளை பரப்பியதால் இன்று (10) காலை முதல் அந்த வீதியில் போக்குவரத்து

Leave a Comment