29.5 C
Chennai
June 30, 2026
இலங்கை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கைது

நேற்று 29 அதிகாலை கிரீன் சேனல் வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வெளியேற முயன்றபோது, சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் குறித்த பெண் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 42 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற சீனப் பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நேற்று 29 அதிகாலை கிரீன் சேனல் வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வெளியேற முயன்றபோது, சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைதுசெய்யப்பட்டவர் 40 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 28,000 சிகரெட்டுகள் அடங்கிய 140 கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டன.அவற்றின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 42 இலட்சம் ரூபா என சுங்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பிரச்சினை முடிந்துள்ளது ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள்

finhelvantaan

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்.கரூர் கிளம்பி செல்கிறாரா விஜய்

finhelvantaan

Leave a Comment