பரிந்துரைக்கிறோம் என்று ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் Ursula von der Leyen தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிசக்தி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின்சாரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளைக் குறைக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில், எரிவாயுவை விட மின்சாரத்திற்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.இது 15 மடங்கு அதிகமாகும். இது அவ்வாறு இருக்க முடியாது. மின்சாரத்திற்கான வரி விகிதங்களைக் குறைக்கவும், புதைபடிவ எரிபொருட்களை விட Fossil fuels மின்சாரத்திற்கு குறைந்த வரி விதிக்கப்படுவதை உறுதி செய்யவும் பரிந்துரைக்கிறோம் என்று ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் Ursula von der Leyen தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் புதைபடிவ எரிபொருட்களில் இருந்து விலகிச் செல்வதற்கு உதவும் முதலீடுகள் மூலம் நிதி உதவி வழங்குவதற்கான முன்மொழிவுகளையும் அவர் ஐரோப்பிய தலைவர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.ஈரானில் மோதல்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் இருந்த மட்டத்தை விட, ஐரோப்பாவில் எரிவாயு விலை தற்போது இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

