July 21, 2026
இலங்கைதமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்தார். 2021-ல் லீஸுக்கு விட்டார். 2026-ல் விற்றுவிட்டார உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சி, அரசியல் என இரண்டிலும் இந்தியாவுக்கே வழிகாட்டி

2019-ல் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்தார். 2021-ல் லீஸுக்கு விட்டார். 2026-ல் விற்றுவிட்டார். தன்னுடைய சுய லாபத்திற்காக அதிமுகவை அழிவுப் பாதையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு செல்கிறார்.” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கோவை மாவட்டம், கணியூரில் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாட்டின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்

இந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சி, அரசியல் என இரண்டிலும் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்து வருகிறார். இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஜனநாயகப் போரை நமது தலைவர் தலைமையில் நடத்த வேண்டும் என இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் எத்தனை வாக்குச் சாவடிகள் உள்ளன என்பதே தெரியாமல் பல கட்சிகள் கணக்கெடுப்பு நடத்துகின்றன. சுயநலத்திற்காக அதிமுகவை

பாஜகவிடம் விற்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. திமுக இ.டிக்கும் பயப்படாது, மோடிக்கும், மோடியின் டாடிக்கும் பயப்படாது. தேர்தலை காரணம் காட்டி திட்டங்களை பாஜக முடக்க நினைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி எப்போது தொலைக்காட்சியில் தோன்றினாலும் மக்கள் மத்தியில் பயம் வந்துவிடுகிறது. கொரோனா காலத்தில் திடீரென ஊரடங்கு உத்தரவிட்டார். அதேபோல், பண மதிப்பிழப்பு உள்ளிட்டவற்றை திடீரென அறிவித்து மக்களுக்கு அச்சத்தைக் கொடுத்தவர் பிரதமர் மோடி. மக்களுக்குக் கொடுக்கும் ஆட்சியாக திமுக அரசு உள்ளது. மக்களிடம் இருந்து பிடுங்கும் ஆட்சியாக பாஜக ஆட்சி உள்ளது.

மகளிர் விடியல் பயணத் திட்டத்தை ரத்து செய்ய நினைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தால் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைவதாக பேசியுள்ளார். காரைக்காலில் மத்திய அமைச்சர் அமித்ஷா பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். எவ்வளவுதான் பெயிண்ட் அடித்தாலும், சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மக்கள் உங்கள் முகத்தில் கரியைத்தான் பூசுவார்கள். சிலர் நமது இயக்கத்தை அழித்துவிடலாம் என பகல் கனவு காண்கிறார்கள். ஆனால், யாராலும் எந்த நேரத்திலும் நமது இயக்கத்தை அழிக்க முடியாது. பிரதமர் மோடிக்கு முரட்டு அடிமையாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

செயல்படுகிறார். பாஜகவின் கலவர அரசியலை தமிழ்நாடு மக்கள் என்றைக்கும் அனுமதிக்க மாட்டார்கள். Westலயும் திமுகதான் Best என்பதை இந்த கூட்டம் நிரூபிக்கும். தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிற 2026 சட்டமன்றத் தேர்தலில், மேற்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெறும். அதற்கு உங்கள் எழுச்சியே சாட்சி. திமுக இளைஞரணி கட்டுக்கோப்பாக உள்ளது. இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரான ஒரு ஜனநாயக போரை நம்முடைய தலைவர் தலைமையில் நடத்த வேண்டுமென மற்ற மாநிலங்களில் உள்ள தலைவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

2019-ல் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்தார். 2021-ல் லீஸுக்கு விட்டார். 2026-ல் விற்றுவிட்டார். தன்னுடைய சுய லாபத்திற்காக அதிமுகவை அழிவுப் பாதையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு செல்கிறார். உயிருடன் இருந்தால் எம்ஜிஆர் அழும் அளவுக்கு அதிமுகவை அழிவுப்பாதைக்கு எடப்பாடி கொண்டு செல்கிறார்.” எனப் பேசியுள்ளார்.

Related posts

இலங்கையிலிருந்து வெளியான கடும் விமர்சனம் ஈ.பி.டி.பி ஸ்ரீகாந்தினால் குறித்த கண்டனம்

finhelvantaan

2026 உலகக் கிண்ணமே ரொனால்டோவுக்கு கடைசி

finhelvantaan

கடுமையாக தாக்குவோம் டிரம்ப் மிரட்டல் கத்தார் மீது கை வைத்தால்

finhelvantaan

Leave a Comment