பலுசிஸ்தான் மாகாணத்தை அமைதியும் பாதுகாப்பும் மிக்க இடமாக மாற்றுவதற்கு தனது அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக முதலமைச்சர் சர்ஃப்ராஸ் புக்தி தெரிவித்துள்ளார்.தென்மேற்கு நகரமான குவெட்டாவில் உள்ள துணை இராணுவப் பாதுகாப்புப் படையின் தலைமையகத்திற்கு வெளியே தீவிரவாதிகள் சக்திவாய்ந்த கார் குண்டை வெடிக்கச் செய்ததோடு சுமார் எட்டு பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தீவிரவாதிகள் தங்கள் கோழைத்தனமான செயல்கள் மூலம் நாட்டின் உறுதியை சீர்குலைக்க முடியாது. பிரிவினைவாதிகள் பாதுகாப்புப் படையினரையும், பிராந்தியத்தின் பிற இடங்களிலுள்ள பொதுமக்களையும் குறிவைப்பதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்க தாக்குதல்.பலுசிஸ்தான் மாகாணதத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அமைதி மிக்க பிரதேசமாக பலுசிஸ்தானை மாற்ற எமது அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
