30.4 C
Chennai
July 24, 2026
இலங்கை

சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்குவதை ஆதரித்ததாக சட்ட மாஅதிபர்

குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  சட்டமா அதிபர் திணைக்கள பணியாளர்கள் மீது சமூக ஊடகங்களில் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பதவி உயர்வுக்காக காத்திருக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிள்ளையானுக்கு பிணை
பிள்ளையான் எனப்படும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்குவதை ஆதரித்ததாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் மீது சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கில், சிரேஷ்ட அதிகாரிக்கு பதிலாக கனிஷ்ட அதிகாரியொருவரை சட்டமா அதிபர் திணைக்களம் பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.சட்ட மாஅதிபர் திணைக்களம் இதுவரை 600ற்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகைகளை மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், சமூக ஊடகங்கள் மூலம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The current image has no alternative text. The file name is: 1744127286123736-0.jpg

Related posts

மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரிப்பு! வளைகுடா போரால்

finhelvantaan

மசாஜ் நிலையம் என இயங்கிவந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார்

finhelvantaan

நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று 9 பிறப்பித்துள்ளது. பிணையில் செல்ல அனுமதி டக்ளஸ் தேவானந்தாவை 

finhelvantaan

Leave a Comment