July 13, 2026
தமிழ்நாடு

திணறிப்போன தவெக தலைவர் விஜய், கோவைக்கு வருகை தந்த குலுங்கிய கோவை

குலுங்கிய கோவை.. பவுன்சர்கள் தடுக்க தடுக்க.. வேனில் ஏறிக்கொண்டே இருந்த தொண்டர்கள்! திணறிப்போன விஜய் தவெக தலைவர் விஜய், கோவைக்கு வருகை தந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து தான் தங்கும் ஹோட்டல் வரை ரோடு ஷோ செல்கிறார். விஜய் செல்லும் திறந்தவெளி வாகனத்தில் ஏறி தவெக தொண்டர்கள்

 

அவரை தொட்டு கைகுலுக்கினர். பவுன்சர்களை மீறி அடுத்தடுத்து தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் கோவையில் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கு கோவை குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.தவெக கருத்தரங்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு நடைபெற

 

உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அண்மையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்நிலையில் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய். அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த தவெக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும்,

 

நாளையும் நடக்கிறது. ந்த மாவட்ட நிர்வாகிகளுக்கான கருத்தரங்கு கூட்டம் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. கோவை வந்த விஜய் இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக தவெக தலைவரும் நடிகருமான விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதையடுத்து தவெக தலைவர் விஜய் திறந்தவெளிவாகனத்தில் இருந்து தொண்டர்களை நோக்கி கை

 

அசைத்தார். தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வழிநெடுகிலும் பெண்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். திறந்த வேனில் விஜய் விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி வாகனத்தில் ஏறி தொண்டர்களை நோக்கி கையசைத்து கொண்டே ரோடு ஷோ சென்றார் விஜய். திறந்த வெளி வாகனத்தில் நின்ற விஜய்யை நோக்கி கட்சித் தொண்டர்கள், கட்சித்

 

துண்டுகளை வீசினர். அதனை பிடித்து தனது தோளில் போட்டபடி ரசிகர்களை பார்த்து கையசைத்தபடியே அங்கிருந்து புறப்பட்டார் விஜய். விஜய் திறந்தவெளி வேனில் நின்றவாறு செல்லும்போது, தவெக தொண்டர்கள் சிலர் வேனில் அத்துமீறி ஏறி விஜய்க்கு கைகுலுக்கினர். விஜய் அவர்களை வேனில் இருந்து இறங்குமாறு கூறியும், தொடர்ந்து ஓவ்வொருவராக வேனில் ஏறிக்கொண்டே இருந்தனர். விஜய்யின் பாதுகாவலர்கள் வாகனத்தில் ஏற முயன்றவர்களைத் தடுத்தபோதும் அவர்கள் தொடர்ந்து ஏறி விஜய்க்கு வணக்கம் கூறினர்.வாகனத்தில் ஏறிய விஜய் கட்சி

 

தொண்டர்கள் தொடர்ந்து அடுத்தடுத்து தொண்டர்கள் வாகனத்தில் ஏறிக்கொண்டே இருந்தனர். தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், கூட்டத்தை கட்டுப்படுத்த மைக்கில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். எனினும் தொண்டர்கள் விஜய்க்கு அருகில் செல்லும் ஆவலில் வாகனத்தின் மீது ஏறிக்கொண்டே இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. திறந்தவெளி வாகனத்தில் சாலை மார்க்கமாக செல்லும் விஜய், அவிநாசி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு செல்கிறார். அங்கிருந்து இன்று பிற்பகல் 3 மணி அளவில் கருத்தரங்கம் நடைபெறும் தனியார் கல்லூரிக்கு செல்ல உள்ளார்.

The current image has no alternative text. The file name is: 493600452_999871878957180_5660850152483775457_n.jpg

Related posts

திமுக கூட்டணி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்!

finhelvantaan

விஜய் பக்கம் தாவினால்… தமிழக அரசியலில் என்ன ஆகும் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் ‘அவுட்’

finhelvantaan

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை ஆளுநர் ஆர்.என்.ரவி

Leave a Comment