நடிகர் அஜித் அவர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய விருதான பத்ம பூஜன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசு சார்பில் நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டு நிலையில், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் கட்சியினர், நடிகர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் அஜித்துக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைக்கச் சொல்லியிருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கின்றது. தற்போது நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடா முயற்சி, குட்பேட் அக்லி திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
ஏற்கனவே துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி மூன்றாவது இடம் பிடித்திருந்தது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அடுத்த குட் நியூஸாக அவருக்கு மத்திய அரசின் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை உச்சகட்ட குஷி மோடிற்கு கொண்டு சென்றுள்ளது.
மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, இலக்கியம், மருத்துவம், விளையாட்டு, சமூகப்பணி, தொழில்துறை என்று பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு மொத்தமாக 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம பூஷண்
விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத் துறையில் நடிகர் அஜித் குமார், நடிகை சோபனா சந்திரகுமார், தொழில் மற்றும் வர்த்தக துறையில் நல்லி குப்புசாமிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
