பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தலைவர் அசிம் மாலிக் வங்கதேசம் சென்றுள்ளார். இந்தியாவுக்கு எதிரான சதி ஆலோசனைகளில் இரு நாட்டு உளவு அமைப்பினரும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்தவரை, இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள், சதித்திட்டங்களை தடுத்து வந்தார். அதே நேரத்தில், சர்வதேச விவகாரங்கள், சார்க், எல்லை தாண்டிய தீவிரவாதம் போன்ற பலவற்றில், இந்தியாவின் நிலைப்பாட்டையே ஷேக் ஹசீனாவும் பின்பற்றி வந்தார்.
அவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், வங்கதேசத்தில் இந்திய விரோத மனநிலை கொண்ட அமைப்பினர் இடைக்கால அரசை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., வங்கதேசத்தில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு வருகிறது.
