சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: ஒருவர் பலி, 12 வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் காயம்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (17) விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 சுற்றுலா பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 5.15 மணியளவில் கொழும்பில் இருந்து மத்தளை நோக்கி பயணித்த குறித்த பஸ் அபரெக்கவக்கும் பெலியத்தவுக்கும் இடையில் முன்னால் சென்று கொண்டிருந்த லொறியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பஸ்ஸில் பயணித்த 12 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்த நிலையில், சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 7 பேர் மேலதிக சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
