முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.�
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 14-ஆம் தேதியும், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி 17-ம் தேதியும் நடந்து முடிந்தது. அந்த வரிசையில் இன்று புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7.50 மணிக்கு தொடங்கியது. போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 1,200 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்பதற்காக வந்த 959 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 3 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. மீதமுள்ள 956 காளைகள் கோவில் காளைகள் உட்பட 1,000 காளைகள் களம் கண்டது.
இதேபோல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் பங்கேற்க 545 வீரர்கள் வந்திருந்த நிலையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனையில் மது அருந்தியது, உடல் தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களுக்காகவும் வயது மூப்பு காரணமாக அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கொன் ஆண்டனி உள்ளிட்ட 55 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
