பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முக்கிய

25-6788c6adee212.jpeg

பிக் பாஸ் 8ம் சீசன் இது கடைசி வாரம் என்பதால் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேறி விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியான தகவல் உறுதியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 8ம் சீசன் இது கடைசி வாரம் என்பதால் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

மொத்தம் 6 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக வீட்டுக்கு பெட்டி அனுப்பப்படும். அதை போட்டியாளர்கள் விருப்பப்பட்டால் எடுத்துக்கொண்டு செல்லலாம் என்பது போல தான் முந்தைய சீசன்களில் இருந்தது.  வழக்கத்திற்கு மாறாக இந்த முறை அது மாற்றப்பட்டு போட்டியாளர்கள் கதவை தாண்டி ஓடிச்சென்று பெட்டியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் வரவேண்டும்.

அப்படி அவர்கள் வரவில்லை என்றால் எலிமினேட் ஆவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முத்துக்குமரன் ஓடிச்சென்று 40 ஆயிரம் ரூபாயோடு பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தார்.

2வதாக ரயான் ஓடிச்சென்று 2 லட்சம் ரூபாயோடு பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தார். 3வதாக பவித்ரா ஓடிச்சென்று 2 லட்சம் ரூபாயோடு பெட்டியை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.

4வதாக ஓடிச்சென்ற சௌந்தர்யா 2 லட்சம் ரூபாயோடு பெட்டியை எடுத்துக்கொண்டு வர முடியாது பாதியிலேயே திரும்பிவந்துள்ளார்.

இந்த நிலையில் 5வதாக ஓடிச்சென்று பணப்பெட்டி டாஸ்க்கில் பங்கேற்ற ஜாக்குலின் பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வர முடியவில்லை. இதனை தொடர்ந்து ஜாக்குலின் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *