பெண்களை பின்தொடர்ந்தால் ஐந்து ஆண்டுகள் சிறை; பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை என, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் புதிய சட்ட மசோதாக்கள் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டன.
பெண்களை பின்தொடர்ந்தால் ஐந்து ஆண்டுகள் சிறை; பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை என, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் புதிய சட்ட மசோதாக்கள் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டன.
டிஜிட்டல் வழியாக பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை, சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வருவதற்காக, சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு தண்டனைகளை அதிகரிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இதனால், இது போன்ற மோசமான செயல்கள் குறைக்கப்படும்.
எனவே, பெண்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வலுப்படுத்த, முதன்மை சட்டத்தின் நோக்கத்தை விரிவுப்படுத்த, பெண்களுக்கு துன்புறுத்தல் ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக, கடுமையான தண்டனை வழங்கவும் சட்ட திருத்தம் செய்யப்படுகிறது.
கல்வி நிலையம், விடுதி, கோவில் அல்லது பிற வழிபாட்டிடம், திரையரங்கு, உணவு விடுதி, உணவகம், மருத்துவமனை, வணிக வளாகம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள், விளக்குகள் பொருத்துதல் என, பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தால், போலீசாருக்கு 24 மணி நேரத்திற்குள் தகவல் அளிக்க வேண்டும். பாலியல் பலாத்காரம் – 14 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் அல்லது ஆயுள் காலத்திற்கு கடுங்காவல் சிறை
12 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல் ஆயுள் காலத்திற்கு கடுங்காவல் சிறை மற்றும் அபராதம் அல்லது மரண தண்டனை பாலியல் பலாத்காரம், மரணத்தை விளைவிக்கும் அல்லது செயலற்ற நிலையை விளைவிக்கும் காயத்தை ஏற்படுத்துதல் – ஆயுள் காலத்திற்கு கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை
கூட்டு பாலியல் பலாத்காரம் – ஆயுள் காலத்திற்கு கடுங்காவல் தண்டனை
18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் – ஆயுள் காலத்திற்கு கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை
மீண்டும் மீண்டும் குற்றம் இழைக்கிற குற்றவாளிகள் – மரண தண்டனை அல்லது ஆயுள் காலத்திற்கு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம்
சில குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துதல் – மூன்று ஆண்டுகளுக்கு குறையாத, ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் உட்கருத்துடன் தாக்குதல் அல்லது பலத்தை பயன்படுத்துதல் – மூன்று ஆண்டுகளுக்கு குறையாத, ஐந்தாண்டுகள் வரை சிறை ஆகியவற்றில் இரண்டில் ஒன்று மற்றும் அபராதம்
பெண்ணின் ஆடையை அகற்றும் உட்கருத்துடன் தாக்குதல் அல்லது முறையற்று பலத்தை பயன்படுத்துதல் – ஐந்தாண்டுகளுக்கு குறையாத, 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் மறைந்து காணும் பாலியல் கிளர்ச்சி – இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்
பெண்ணை பின்தொடர்தல் – ஐந்தாண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்; இரண்டாம் முறை ஏழு ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்அமிலம் பயன்படுத்தி கொடுங்காயம் விளைவித்தல் – ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை
