குரங்குகளின் தொல்லைககள்

download-2-8.jpeg

களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம். குருக்கள்மடம், குரங்குகளின் தொல்லைககள்

மட்டக்களப்பில் நகர் புறங்களில் குரங்குகளின் தொல்லைககள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம். குருக்கள்மடம், மற்றும் வெல்லாவெளிப் பகுதியிலும் போன்ற பல பகுதிகளிலும் இவ்வாறு குரங்குகள் கிராமங்களுக்குள் உட்பகுந்து பயன்தரும், மா, தென்னை, வாழை, உள்ளிட்ட பல்லாண்டுப் பயிரினங்களை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில அப்பகுதியில் செய்கைபண்ணப்பட்டுள்ள கத்தரி, வெண்டி, புடோல், மிளகாய், உள்ளிட்ட பல மேட்டுநிலப் பயிரினங்களையும், இவ்வாறு குரங்குகள் அழித்து வருவமாக அப்பகுதி விவசாயிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே குரங்குகளை அப்பகுதியிலிருந்து அப்பறப்புறப்படுத்தி தாம் சுயமாக பயிர்செய்து வாழ்வதற்குத் தடையாகவுள்ள குரங்குத் தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *