பின்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்து நீண்டகாலமாக தங்கியிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2018ஆம் ஆண்டு முதல் பெரலிஹெல – திஸ்ஸமஹாராம பகுதியில் இலங்கையர் ஒருவருடன் வாடகை அடிப்படையில் அவர் வசித்து வந்துள்ளார். இந்த வெளிநாட்டவர் சுகயீனம் காரணமாக திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் தொடர்பான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
