தமிழ்நாட்டில் பைக் டாக்சி சேவைக்கான அனுமதி உண்டா.. இல்லையா ஆட்டோக்களில் சென்றால் 200 ரூபாய் என்றால், வெறும் 50 ரூபாய் கொடுத்து அந்த இடத்திற்கு பைக்கில் போய்விட முடியும்.
என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அண்மையில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த போது போக்குவரத்து துறை சார்பில் முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. அதேநேரம் பைக் டாக்ஸிக்கு தடை.. தடையில்லை என்ற பதிலும் உறுதியாக தெரியவில்லை. இப்போது அந்த உண்மை தெரியவந்துள்ளது.
கால மாற்றத்திற்கு ஏற்ப பெரு நகரங்களில் தொடங்கி சிறிய நகரங்கள் வரை போக்குவரத்து விஷயங்களில் புதிய மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. முதலில் பேருந்து எப்போது வரும் என்று காத்திருந்த மக்கள், அதன்பிறகு ஓரளவு எளிதாக போக்குவரத்து வசதிகளுக்கு ஆட்டோ ரிக்ஸாக்களை அணுக தொடங்கினார்கள். அதன்பிறகு கார்கள் மெல்ல மெல்ல வாடகைக்கு வர ஆரம்பித்தன. தற்போதைய நிலையில் பேருந்துகள், வேன்கள், கார்கள், ஆட்டோக்களை வணிக நோக்கத்துடன் பயன்படுத்தலாம். அதற்கான சட்ட விதிகள் உள்ளன.
ஆனால் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, அஹமதாபாத், புனே, கொச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களில் வாகன நெருக்கம் அதிகமானது. பல லட்சம் மக்கள் இந்த நகரங்களில் வசிக்கிறார்கள். இதில் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் கோடிக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். ஆட்டோக்களே செல்ல முடியாத சாலைகளும் உள்ளன. இந்நிலையில் இருசக்கர வாகனங்களை கேப்களாக பயன்படுத்த தொடங்கினார்கள். கார்களில் ஆட்டோக்களில் சென்றால் 200 ரூபாய் என்றால், வெறும் 50 ரூபாய் கொடுத்து அந்த இடத்திற்கு பைக்கில் போய்விட முடியும்.
