ரம்புக்வெல்ல, அவரது மனைவி சொத்துக்களை முடக்க

download-12-3.jpeg

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி ,உறவினர்கள் என பலரின் சொத்துக்களை முடக்க

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் ஆகிய இரண்டையும் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வார காலத்திற்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைநீக்க உத்தரவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் மேலும் நீடிக்க எதிர்பார்ப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது

கடந்த காலங்களில், இந்த விசாரணை தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி ,உறவினர்கள் என பலரின் சொத்துக்களை முடக்க கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *