அரசாங்கத்தையும் விரட்ட தயக்கம் காட்டப்போவதில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்
முழு விவரங்களுக்கு
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில், மீண்டும் நாடு நெருக்கடியை சந்தித்தால் தற்போதைய அரசாங்கத்தையும் விரட்ட தயக்கம் காட்டப்போவதில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
நமது நாடு சிங்கப்பூர் அல்லது பிரித்தானியா போன்று மாற அவசியமில்லை எனவும் நாட்டிலுள்ள ஊழல் ஒழிக்கப்பட்டு நியாயமான ஆட்சி இடம்பெற்றால் போதும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், புதிய அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை காணப்படுவதாகவும் இன, மொழி, பேதம் இன்றி ஒரே நாட்டின் மக்கள் என நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
