எங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் எனச் சொல்லுங்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த நபரென்றால் எதற்காக ஒளிந்து விளையாட வேண்டும் என ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்னவுக்கு அமைச்சர் சமந்த வித்யாரத்ன பதிலடி கொடுத்துள்ளார்.தனது
�
தந்தையைக் கைது செய்தாலும், செய்யாவிட்டாலும் இந்த ஆட்சியைக் கவிழ்ப்போம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.வரலாறு அவரை விடுதலை செய்யும் எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன தெரிவித்தார்.இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்
�
ராஜித சேனாரத்னவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று நிராகரிக்கப்பட்டது.அதன்பின்னர் நீதிமன்ற வளாகத்தில் கருத்து வெளியிடுகையிலேயே ராஜிதவின் மகன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ,சட்டம் எவ்வாறு செயற்படும் என்பது எமக்குத் தெரியாது. அதில் நாம் தலையிடுவதும் கிடையாது. எனினும், கைது பயத்திலேயே ராஜித பதுங்கி
�
இருக்கக்கூடும்.சிறைச்சாலையில் இருப்பதை விடவும் ஒளிந்திருப்பது கஷ்டமாகவே இருக்கும். அந்தக் கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டு வரட்டும். சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றார்.
