Pothikai.fm
இன்றைய_ராசிபலன்கள்.
02-06-2025.திங்கட்க்கிழமை
💐மேஷம்.
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் முக்கிய விஷயங்கள் நடக்கும். மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.பெற்றோர்களின் ஆசி கிட்டும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உத்யோகத்தில் சில நெருக்கடிகள் வரும்.தொழில் வியாபாரங்கள் செழிப்பை தரும்.
💐ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த மாற்றம் வரும். பிரியமானவர்களின் வருகை இருக்கும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு அவசியம்.தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
💐மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். உறவினர்களால் வீண் அலைச்சல் ஏற்படும்.பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. திட்டமிட்ட வேலைகள் தடைகளின்றி முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
💐கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
💐சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, நேற்றைய பிரச்சனைக்கு இன்று நல்ல முடிவு வரும். பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும்.முன் கோபத்தால் பிரச்சனைகள் தேடி வரும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
💐கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் மனநிறைவு ஏற்படும்.கணவன் மனைவி உறவு பலப்படும். மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடிவடையும். உத்யோகத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் தவிற்க்கவும்.
💐துலாம்
துலாம் ராசி நண்பர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வெளிவட்டாரத்தில் அவப்பெயர் உண்டாகும்.பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, அநாவசியச் செலவுகளை குறைத்துக்கொள்ளவும். திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரம் சிறப்படையும்.
💐தனுசு
தனுசு ராசி நண்பர்களே, மனக்குறைகளை வெளியில் சொல்ல வேண்டாம். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.புதிய வாகன யோகம் உண்டு. சவாலான வேலை களையும் சாதாரணமாக செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.
💐மகரம்
மகர ராசி நண்பர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும்.சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமும் நிதானமும் அவசியம்.
💐கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும்.சகோதரர்களடம் நல் இணக்கம் ஏற்படும். திருமணம் காரியம் கைகூடி வரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
💐மீனம்
மீன ராசி நண்பர்களே, எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். முன் கோபத்தை தவிற்பது நலம்.துணிச்சலாக முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
