சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே ல் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 3வது புதிய ஆலை பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்திகரித்து, குடிநீராக சென்னை மக்களுக்கு விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நெம்மேலியில் கடல்நீரை
�
குடிநீராக்கும் 3-வது புதிய ஆலைக்கு கடலில் பதிக்கப்பட்ட 1,500 மீட்டர் நீளம் உள்ள குழாய்கள் கடல் சீற்றம் காரணமாக கரை ஒதுங்கி இருக்கிறது. இதனை கடலுக்குள் நகர்த்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 3-வது புதிய ஆலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புதிய ஆலையில் நாள் ஒன்றுக்கு 400
�
மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்திகரித்து, குடிநீராக சென்னை மக்களுக்கு விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது.நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மூலமாக சுமார் 9 லட்சம் மக்கள் பயனடைவர். இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் தென்சென்னை பகுதிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது. இங்கிருந்து மடிப்பாக்கம், வேளச்சேரி, பல்லாவரம் உள்ளிட்ட 12 இடங்களுக்கு குடிநீர்
�
விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது.இந்த புதிய குடிநீர் ஆலைப்பணிகள் போர்க்கால அடிப்படையில் தயாராகி வரும் நிலையில் அதற்கு பயன்படுத்தப்படும் குழாய்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கடலில் பதிக்கப்பட்டு இருக்கிறது, இந்நிலையில் மே 1ம் தேதியான நேற்று காலை பலத்த கடல் சீற்றம் காரணமாக 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த குழாய்கள் திடீரென கரை ஒதுங்கியது.இது குறித்து
�
கடல்நீரை குடிநீராக்கும் திட்ட அதிகாரிகளுக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் பொக்லைன் எந்திரம், விசைப்படகுகள் உதவியுடன் கடலில் உள்ளே நகத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மிகப்பெரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கடலில் பாதிக்கப்பட்ட இக்குழாய்கள் எப்படி கரை ஒதுங்கியது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.சுமார் ஒரு
�
கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,500 மீட்டர் நீளமுள்ள குழாய்கள் கரை ஒதுங்கி இருந்தது. இதனால் அந்த பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடலுக்குள் குழாய்களை நகர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது
