இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாக். ராணுவம் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருக்கிறது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது கடந்த சில நாட்களாகவே எல்லை பகுதியில் துப்பக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, உரி மற்றும் அக்னூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில்,
�
பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் அத்துமீறி சிறிய அளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்னறிவிப்பு இல்லாத இந்த திடீர் தாக்குதலால் எல்லையில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இது பற்றிய மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். 1990களுக்கு
�
பிறகு சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். தாக்குதல் நடைபெற்ற இடமும், உதவி உடனே கிடைக்க வாய்ப்பில்லாத பகுதியாகும். அதாவது பஹல்காமிலிருந்து 6 கி.மீ தொலைவில் பைசரன் பள்ளத்தாக்கு இருக்கிறது. இங்கிருந்துதான் புகழ்பெற்ற துலியன் ஏரிக்கு போக முடியும். ஆனால் பஹல்காம் டூ பைசரன் பள்ளத்தாக்குக்கு போக வாகன வசதிகள் கிடையாது. நடந்தோ, குதிரை மூலமாகவோதான் போக முடியும். இதனை தெரிந்துக்கொண்டேதான், அங்கு வந்த
�
பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது லக்ஷர் இ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் கிளையாகும். இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐஎஸ் தொடர்ந்து உதவி செய்து வருவதாக சந்தேகம் இருக்கிறது. இப்படியாக இந்த தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்குமான தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதே நேரம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
�
இரங்கலை தெரிவித்த பாகிஸ்தான், அதனை நடத்தியவர்களை கண்டிக்கவில்லை. இது சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. இப்படி இருக்கையில் இந்தியா சில ராஜதந்திர ரீதியிலான பதிலடியை கொடுத்தது. குறிப்பாக பாகிஸ்தான் நாட்டில் உள்ள 23 கோடி மக்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. இதனால் கோபமடைந்த அந்நாடு, இது அறிவிக்கப்படாத போர் என்று குற்றம்
�
சாட்டியது. பதிலுக்கு சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இருநாட்டு எல்லையில் அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாகவே நேற்றிரவும் இரு நாட்டு ராணுவத்திற்கு இடையில் துப்பாக்கி சண்டை நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
